என் வீட்டுத் தோட்டம் - சிறுவர் பாடல்
என் வீட்டுத் தோட்டம் - சிறுவர் பாடல் பட்டுடுத்த வாழையில் குலைகள் நன்றாய்த் தொங்குது கொய்யாமரம் தன்னிலே அணிலும் அங்கே தாவுது பழங்கள் சுவைக்க ஓடுது சுவைத்து சுவைத்து மகிழுது பப்பாசியில் பழங்களும் பக்குவமாய் தொங்குது மாம்பழத்தின் மகிமையை கிளிகள் கதையாய் சொல்லுது தோடம் பழத்தின் சுவையது களைப்பு தன்னைப் போக்குது கொடியில் தோடை தொங்குது கோடி நன்மை தருகிது கூடி நாங்கள் வாழவே நன்மை பலவும் கிட்டுமே ரவிகிறிஷ்ணா கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் மட/கிரான்குளம்