Posts

Showing posts from December, 2024

எங்கள் வீட்டின் இசை

  எங்கள் வீட்டின் இசை ×××××××××××××××××××× எங்கள் வீடு தன்னிலே தட்டுமுட்டு யாவுமே இசையைப் பேசிச் செல்லுமே இனிய கணங்கள் தோறுமே கதவு பாடும் கானமும் துலா சொல்லும் வீணையும் கருவி இலா கானமாய் நித்த நித்தம் வீட்டிலே நிலைத்த கதைகள் சொல்லுமே குளிப்பு நேர நீரிலே சலசலத்த ஓசையும் குழந்தை மழலைப் பாடலும் கூவும் குயிலினோசையும் கரையும் காக வித்தையும் கரைந்திடாத தத்தையும் இசையின் வடிவமாகுமே ஆடுகின்ற மரத்திலே அழகு வண்ணம் தோன்றியே இசைக்கும் தெனாறல் கீதமே இனிய பாடலாகுமே கவிஞர் ரவிகிருஷ்ணா

புத்தாண்டு

 புத்தாண்டு  ************  புத்தாண்டு என்கிறார் புதிய கதை பேசுறார் மத்தாப்பு கையெடுத்து  மதிமயங்கி நிற்கிறார் எக்காலம் எதுவென்று  ஏளனமாய் பேசுறார் முடிந்த கதை முடிந்ததென்று  முசுப்பாத்தி பண்ணுறார் பக்கமெல்லாம் படர்ந்து வந்து  பழைய கதை முடிக்கிறார்  சிட்டெனவே சிறகடித்து  சில நிமிடம் பறக்கிறார் கண்டதெல்லாம் கையெடுத்து  கருணை மனு கேட்கிறார் சடுதியிலே சறுக்கி நின்று  சண்டைப் பயிற்சி செய்கிறார் தத்தித்தாவி தவழ்ந்து வந்து  தடயம் ஒன்று வைக்கிறார் இத்தனையும் விட்டெறிந்து இளைப்பாறுவம் என்கிறார் மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு  முடிந்த கதை பேசுறார்  அத்தனையும் சொர்க்கம் என்று  அப்படியே நிற்கிறார் ஆசா பாசம் காட்டிக்கொண்டு  ஆலாபனை பண்ணுகிறார் இலக்கியங்கள் பேசுகின்ற  இனிய கதை சொல்லுகிறார் ஈடிணையாய் கதைகள் பேசி  ஈர இதயம் தருகிறார்  உள்ளதெல்லாம் உருவம் என்று  உரக்கச் சொல்லி நிற்கிறார் ஊரும் உலகும் பேசுகின்ற  ஊக வார்த்தை சொல்லுறார் எண்ணமெல்லாம் கதை எழுதி எப்பொழுதும் மகிழ்கிறார் ஏணிய அதன்படியிலே  ...
 உறவுகளோடு  வைத்திருக்க வேண்டிய  அன்பையும் பண்பையும் மனிதன் கைபேசியோடும் தொலைக்காட்சியோடும் இன்று பரிமாறிக்கொள்கிறான் நாளை எப்படியோ?????? கவிஞர் ரவிகிருஷ்ணா
 வீட்டுச் சுவரில் மீண்டும் மீண்டும் ஒட்டடை தோன்றி துடைப்பத்தின் வலியை  எழுதிச் செல்கிறது கவிஞர் ரவிகிருஷ்ணா
 உயிருடன்  இருப்போரை எண்ணி மயானம் தனக்குள் நகைத்துக்   கொள்கிறது
 மறைந்த தமிழர் தலைவர் கேப்டன் விஜயகாந்த் ****************************************  ஈழத் தமிழரின்பால் இணையிலா அன்பு கொண்டு அவர்களின் புன்னகைக்காய் காத்திருந்து தன் பிறந்தநாளையே  கொண்டாட மறுத்து  தள்ளிவைத்த தலைமகன்  ஏழை எளியவர்பால் எண்ணிலடங்கா அன்பினில் விளைந்தவன்  பலரது வாழ்வு பக்கமெல்லாம் ஒளிபெருக பரபரப்பில்லா பயனுறுதி கொடுத்த பகலவன் இந்த புரட்சியின் நாயகன்  நடிப்பில் மட்டுமல்ல உண்மையின் முகமும் நல் மனிதனாக செயலும் கதையும்  பாரத மாதா அழுத்து போல் ஊடகங்கள் விட்ட கண்ணீரும் நடிகை நடிகையர் விழிகள் சிந்திய துளிகளும்  கேப்டன் கேப்டனென்ற வாசகமும் மனங்களில் பள்ளிகொண்டுவிட்டன  காசு பணம் துட்டு எலாம் வாழுவரை கதை பேசும் அன்பு மட்டுமே நிலைகொண்டு வாழும் நித்திய பூமியென பல அரசியல் மேடைகளை அலங்கரித்த மனச் சுத்திகொண்ட பேச்சு மறுக்கமுடியாத படி மனங்களில் உறைகிறது  தன்னலமற்ற தலைவர் தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட தமிழின் காவலர் கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்.  சொல்லொன்று செயலொன்று என்றில்லாத செயல் வீரர் சொன்ன சொல் வழி நின்...
 கைவிரல் இடுக்கில் பேனா உலகத்தை  அடக்கி விடுகிறது கவிஞர் ரவிகிருஷ்ணா
 அன்றைய தலைமுறையின்  கற்றலை அனுபவித்த  குப்பி விளக்குகள்  இன்று மின் விளக்குகளிலும்  கற்க மறுக்கும்  சந்ததியை பார்த்து  அதிசயித்துக் கிடக்கிறது கவிஞர் ரவிகிருஷ்ணா

அன்பு

 அன்பு #####  நேற்றும் இன்றும் நாளையும் அன்புதான் ஒன்றாய் அரவணைத்துக் கதை பேசி தாயவள் அன்பு சேயுடன் கதை பேசி தந்தையின் அன்பு தாரகை வரமாகி  பிள்ளையின் அன்பு பிடிவாத குணமாகி பெரியோரின் பண்போ பேரின்ப வரமாகி கேட்டதைக் கொடுத்தால் அன்பாய் மலருமோ கொட்டிய வார்த்தைகள் விட்டெறிந்தோடுமோ  விட்டுக் கொடுத்தல் விண்ணையும் தாண்டும் தட்டிக் கொடுத்தல் தரணியைக் காக்கும் மூலை முடுக்கெலாம்  முடங்கி கிடப்பினும் பாதை வழிதொறும் பறந்தே கழிப்பினும்  அன்பின் துணையதே அரவணைப்பதுவாகி அல்லல் விட்டொரு அருளும் தந்தேகி முடிவுடன் கூடி நாம் அன்பால் தேற்றுவோம் முற்றுகையிட்டொரு முரசமும் கொட்டுவோம்  அன்பை அன்பால் அன்பு செய்யும் அன்பே அன்பு  ________ கவிஞர் ரவிகிருஷ்ணா மட்/கிரான்குளம்

கலைஞன்

 கலைஞன் ************  தன்னாவி விட்டு தன் சமூகத்திற்காய் தரமிகுந்த தன்மொழியால் ஆர்ப்பரிக்கும் அர்த்தமவை தருபவனாம் சீர் மிகுந்த கலைஞனவன்  இரவு பகல் மாறினாலும் இடி விழுந்து ஓடினாலும் இலக்கியத்தில் பேசுகிறான் அரங்கதிர ஆட்டம் கண்டு அங்கலாய்த்து நிற்கின்றான்  சமூகத்தின் விடியலுக்கு சாமான்ய விடை கொடுத்து உயர்த்தி விட கலை என்ற சோதியுள் புகுந்து இரண்டறக் கலப்பது தான் சொற்பனம் என்றும் அவனுக்கு  இடைத்தடங்கல் உடைத்தெறிந்து காற்றாக இசையாக மெல்லினத் தென்றலாக தொடர்கிறது பயணம் முடிவுறாத் தண்டவாளங்களில் ஏறிய தொடர் பயணம் அவனுக்கு  இடைவெளி இல்லா வாழ்நாள் உணர்வு மிகுதியால் பரந்து கிடக்கிறது அவனது மன வானம்  எப்போதும் ஏதோ ஒன்றை செய்ய மனம் இசைகிறது செயல் விரிந்து தரம் திரிகிறது  வாழ்நாள் பரீட்சயத்தில் வாழ்வின் சங்க நாதம் ஒலித்திருக்க சூழலுடன் இடைத் தாக்கமாகி இடைவிடா தடயங்களில் என்றுமே முயலும் ஒருவனாக  மீண்டும் தொடரும் மிடுக்கினுள் புகுந்து காலத்தின் ஓட்டத்தில் கலையினால் அவனுமோர் புது உலகு புனைந்திட புதுவழி தேடுகிறான்  நான்கு என்பது கோர்த்து மாமிச் சட்டை பூட்டி...

பாரதி

 பாரதி *******  பாரதியென்றொரு தாமரை பூத்தது சாதியும் பேதமும் போய்விடவே தமிழ் வேதம் முழங்கியே விண்ணுமதிரவே பாடல் புனைந்துமளித்தவரே  இயற்கையெழிலினைப் பாடியும் நாடியும் இயற்றமிழாகவே தந்தவனே நல்ல பக்திப் பரவசம்  மேவியருளியே பாங்காக பாடலும் தந்தவனே  முத்தமிழ் மண்ணில் முழங்கி இசைத்துமே அவன் புகழைச் சொல்லிப் பாடுகிறோம் அங்கமெல்லாம் தமிழ்  உயிருணர்வாய் அல்லோ அவன்கவி பாடவும் ஏறி நிற்கும்  சுதந்திர கீதத்தை சுந்தரமாகவே சுவை படவெமக்குத் தந்தவனே நல்ல நித்திலம் நாங்களும் வாழும் மட்டும் சாதி பேதம் மறந்துதான் வாழ்ந்திடுவோம்  பெண்ணடிமைத்தனம் போக்கியவன் இங்கு பெண்ணின் மகிமையுர்த்தியவன்  பல்வகையாகவே பாடல் தந்து நம்மை பன்மைப்படுத்தி மகிழ்வித்தவன்  ____________ கவிஞர் ரவிகிருஷ்ணா  மட்/கிரான் குளம் ஈழம்

மகள் எழுதிய கவிதை

 மகள் எழுதிய கவிதை ##################  அன்பு மகள் நெஞ்சினுக்கு கவியொன்று நானெழுத அதிகாலை நேரத்திலே  ஆதரவாய் எழுந்திருந்தேன்  பின்னால் ஏதோ  குறும்பொலியின் பரிசம் வந்தாள் இருந்தாள் சிரித்தாள் ஏதேதோ கதைகள் பேசி அணைத்தாள்  என் தலைகள் அவள் கையிடுக்கில் நான் என்னையே மறந்தேன் சில கணப்பொழுதுகள் என் எண்ணமெல்லாம் கலைத்தாள்  நான் எழுத நினைத்தேன் அவளைப்பற்றி அவள் தன்னையே எழுதிவிட்டாள் அந்த அதிகாலைப் பொழுதினிலே அதைவிட கவிதையுமுண்டோ இவ்வையகத்தே  ________ கவிஞர் ரவிகிருஷ்ணா

அழகுக் கோலம்

 அழகுக் கோலம் #############  வீட்டு முற்றம் தன்னிலே விட்டமொன்று கீறியே அழகுக் கோலம் தன்னையே பூவையவள் போடுவாள் பூவின் வண்ணம் காட்சியே  காலை நேரம் ஆனதும் கண்ணியமாய் எழுந்துமே கனத்த கோலம் போடுவாள் அழகுமிங்க தங்கையே  மாவின் வண்ணம் கலந்துமே மாயவித்தை செய்துமே பூச்சி எறும்பு உன்றிட படர்ந்த கோலம் போடுவாள் பூத்த கன்னித் தேவதை  தானியங்கள் கூடியே தரையைக் கொஞ்சி நித்தமே மின்னல் கோலமாகிடும் மீட்டும் பாவை கையாலே  வண்ண வண்ண நிறத்திலே வடிவழகாய் இருக்கவே கண்ட காட்சி கோலமாய் கனவைக் கலைய வைக்குமே __________ கவிஞர் ரவிகிருஷ்ணா மட்/கிரான்குளம்

கூடுகட்டும் பறவை

 கூடுகட்டும் பறவை ***********************  காலையில் எழுந்து கனதிகள் விடுத்து சிறியபல துரும்பெலாம் வகுத்து பிரம்பு கோர்க்கும் கலைஞனாகி நிற்கிறது பறவையொன்று  சிற்பியும் அசந்து போய் ஆச்சரியம் பொங்கியோங்க அகலப்பட்டுக்கிடக்கிறது உழைக்கும் கணங்களெல்லாம்  வித்தை காட்டும் வித்தகனா விதியுறங்கும் புத்தகனா காற்றில் அசைந்தாடிக்களிக்கிறது  வானத்து மேடையிலே வழிபல தேடித்தேடி பிடித்த இடமொன்று கண்டெடுத்து  அமைத்துக் கொள்ளுதலோ தனக்கான இருப்பிடத்தை  தூக்கணாங் குருவிக்கூடு தூங்கித் தூங்கிநிதம் குதுகலமாய் காற்றின் பரிசங்களை தனக்கான பரிசதாக்கி பரிவிடை நெஞ்சினுக்கு நல்வழி சொல்லிச் செல்லும்  மரக்கொப்பு தன்னினுள்ளே மரக்கிளைகள் அடுக்குப் பண்ணி மனதாரப் பள்ளிகொள்ளும் மற்றொரு பறவை  இத்தனைக்கும் மத்தியில்  எந்தன் கண்கள் காண்பதோ  இன்பம் மிகுந்த காட்சியோ கோடி கோடி ____________ கவிஞர் ரவிகிருஷ்ணா

முளைத்த விதை

 முளைத்த விதை ××××××××××××××××  நிலத்திலே நிலைகொண்டு முளைகொண்ட விதையொன்று பசுமையாய் நிறைந்திருந்து நாள்தோறும் தளிர்விட்டு இலைகள் பல பரப்பிநிற்கும்  தடம் பதித்த தருவாகி நல்லுறு நிழல் தந்து மக்கள் மனம் நிறைவுபெற மனதாரப் களிப்புமிகு மரமெனவே விரைவுபெறும்  மறுகணப் பொழுதுகளில் மாறிலா மலர்வுடனே நீள்நெடு வளர்ச்சிகண்டு நிதானமுறு விருட்சமென நிலைத்தொரு உறுதிபெறும்  இலக்கணம் கண்டுகூடி கூடுகட்டும் பறவையது குவலயத்தே துவண்டெழுந்து குடியொன்று காத்துவிட தன்வீட்டைத் தானமைக்கும்  வானுயர்ந்த விருட்சமதோ அடுத்தடுத்து தன்பரப்பில் பிஞ்செனப் பிடித்தெழுந்து காயாகிக் கனியெனவே அமுதமென விரிந்தெழும்பும்  இன்னிசைக் பொழுதுகளில்  பறவைகள் ஆரவாரம் அழகென விரிந்தெழுந்து தம்பசி போக்கிவிட தாராளம் உறுதி கொள்ளும்  அத்தகு தருணமென அமைத்ததுவோ வேறேது விதைதந்த பாடமலோ விழுதாக நிண்டமுற்று நீதானமென நிறுத்தியதே __________ கவிஞர் ரவிகிருஷ்ணா

கிரான்குளத்தூர் நன்னாரித் தேநீர்க் கடையும்

 கிரான்குளத்தூர் நன்னாரித் தேநீர்க் கடையும்  நினைவழியா காலமும் ###################  எங்களூரிலோர் நன்னாரி தேநீர்க்கடை பிரதான சாலையோரம்/ என்றென்றும் காலையில் விழிக்கும் மாலையில் உறங்கும்/ நன்னாரிச் சுவையின்  அருமையும் கூடி சூடது பிடித்திடும்/ இளமையும் முதுமையும் நட்புடன் கூடியே நாலதும் பேசும்/  பக்குவம் பள்ளியாய் நெஞ்சினில் உதித்தவை நேரமும் பார்க்குமோ/ வாகன சாலையில் மிஞ்சிய கதைகளோ  மீதமாய் நீட்டியும்/ பேசிய கதைகளில் மனதிலே நின்மதி நிறைவதாய் சேருமே/ நித்தமும் மொத்தமாய் கையதில் ஏந்திய  குவளையும் மறக்குமோ/  தேநீர் மட்டுமா நன்னாரி இட்டதை நயமுடன் பகிருவார்/ இன்றும் என்றும் நாவினில் ஒட்டியே கதையது பேசுமே/ சுவையதன் அருமையோ நாளெல்லாம் முடியினும் நற்கதி செய்யுமே/ இன்றும் என்றும் மறந்திடக் கூடுமோ தேநீரில் மகிமையே நினைவிலோர் சந்தமாய்/ ________________ கவிஞர் ரவிகிருஷ்ணா  மட்/கிரான்குளம்
 என்னோடு குந்தியிருக்கிறது ஒரு பறவை அதற்கு பாசமும் பரிவும் தெரியும் பேசமட்டும் தெரியவில்லை __________ கவிஞர் ரவகிருஷ்ணா
 எப்போ வருவீர்கள்  தொலைபேசிகளைத் தொலைத்துவிட்டு எங்கள் முகம் பார்ப்பதற்கு புழுதி படிந்த புத்தகங்கள்  துடைப்பத்திடம் விண்ணப்பம் __________ கவிஞர் ரவகிருஷ்ணா
 தேங்கிக் கிடக்கும் நீருக்குத் தெரியும்  கிராமத்தின் வறுமையும் அரசியலுக்குள் அரசியலும் கவிஞர் ரவிகிருஷ்ணா

பசி

 பசி ###  புழுதிக் கால்களுடன் விளையாடும் சிறுபிள்ளை அடுப்பெரியும் நினைப்பதனில் பசியை விட்டுச் செல்கிறது வாசலின் படிகளிலே அடிக்கடி எட்டியெட்டிப் பார்த்தபடி _________ கவிஞர் ரவிகிருஷ்ணா