கலைஞன்

 கலைஞன்

************ 


தன்னாவி விட்டு தன் சமூகத்திற்காய் தரமிகுந்த தன்மொழியால் ஆர்ப்பரிக்கும் அர்த்தமவை தருபவனாம் சீர் மிகுந்த கலைஞனவன் 


இரவு பகல் மாறினாலும் இடி விழுந்து ஓடினாலும்

இலக்கியத்தில் பேசுகிறான்

அரங்கதிர ஆட்டம் கண்டு அங்கலாய்த்து நிற்கின்றான் 


சமூகத்தின் விடியலுக்கு சாமான்ய விடை கொடுத்து உயர்த்தி விட

கலை என்ற சோதியுள் புகுந்து இரண்டறக் கலப்பது தான் சொற்பனம் என்றும் அவனுக்கு 


இடைத்தடங்கல் உடைத்தெறிந்து காற்றாக இசையாக மெல்லினத் தென்றலாக தொடர்கிறது பயணம்

முடிவுறாத் தண்டவாளங்களில் ஏறிய தொடர் பயணம் அவனுக்கு 


இடைவெளி இல்லா வாழ்நாள் உணர்வு மிகுதியால் பரந்து கிடக்கிறது அவனது மன வானம் 


எப்போதும் ஏதோ ஒன்றை செய்ய மனம் இசைகிறது செயல் விரிந்து தரம் திரிகிறது 


வாழ்நாள் பரீட்சயத்தில் வாழ்வின் சங்க நாதம் ஒலித்திருக்க

சூழலுடன் இடைத் தாக்கமாகி இடைவிடா தடயங்களில் என்றுமே முயலும் ஒருவனாக 


மீண்டும் தொடரும் மிடுக்கினுள் புகுந்து காலத்தின் ஓட்டத்தில் கலையினால் அவனுமோர் புது உலகு புனைந்திட புதுவழி தேடுகிறான் 


நான்கு என்பது கோர்த்து மாமிச் சட்டை பூட்டிய உடலும் கொண்டு நடக்கிறது நல்ல வினை என்றும் இந்த பாருலகில் 


____________

கவிஞர்

ரவிகிருஷ்ணா

மட்/கிரான்குளம்

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை