கிரான்குளத்தூர் நன்னாரித் தேநீர்க் கடையும்

 கிரான்குளத்தூர்

நன்னாரித் தேநீர்க் கடையும் 

நினைவழியா காலமும்

################### 


எங்களூரிலோர் நன்னாரி தேநீர்க்கடை

பிரதான சாலையோரம்/

என்றென்றும்

காலையில் விழிக்கும்

மாலையில் உறங்கும்/

நன்னாரிச் சுவையின் 

அருமையும் கூடி

சூடது பிடித்திடும்/

இளமையும் முதுமையும்

நட்புடன் கூடியே

நாலதும் பேசும்/ 


பக்குவம் பள்ளியாய்

நெஞ்சினில் உதித்தவை

நேரமும் பார்க்குமோ/

வாகன சாலையில்

மிஞ்சிய கதைகளோ 

மீதமாய் நீட்டியும்/

பேசிய கதைகளில்

மனதிலே நின்மதி

நிறைவதாய் சேருமே/

நித்தமும் மொத்தமாய்

கையதில் ஏந்திய 

குவளையும் மறக்குமோ/ 


தேநீர் மட்டுமா

நன்னாரி இட்டதை

நயமுடன் பகிருவார்/

இன்றும் என்றும்

நாவினில் ஒட்டியே

கதையது பேசுமே/

சுவையதன் அருமையோ

நாளெல்லாம் முடியினும்

நற்கதி செய்யுமே/

இன்றும் என்றும்

மறந்திடக் கூடுமோ

தேநீரில் மகிமையே

நினைவிலோர் சந்தமாய்/

________________

கவிஞர்

ரவிகிருஷ்ணா 

மட்/கிரான்குளம்

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை