முளைத்த விதை
முளைத்த விதை
××××××××××××××××
நிலத்திலே நிலைகொண்டு
முளைகொண்ட விதையொன்று
பசுமையாய் நிறைந்திருந்து
நாள்தோறும் தளிர்விட்டு
இலைகள் பல பரப்பிநிற்கும்
தடம் பதித்த தருவாகி
நல்லுறு நிழல் தந்து
மக்கள் மனம் நிறைவுபெற
மனதாரப் களிப்புமிகு
மரமெனவே விரைவுபெறும்
மறுகணப் பொழுதுகளில்
மாறிலா மலர்வுடனே
நீள்நெடு வளர்ச்சிகண்டு
நிதானமுறு விருட்சமென
நிலைத்தொரு உறுதிபெறும்
இலக்கணம் கண்டுகூடி
கூடுகட்டும் பறவையது
குவலயத்தே துவண்டெழுந்து
குடியொன்று காத்துவிட
தன்வீட்டைத் தானமைக்கும்
வானுயர்ந்த விருட்சமதோ
அடுத்தடுத்து தன்பரப்பில்
பிஞ்செனப் பிடித்தெழுந்து
காயாகிக் கனியெனவே
அமுதமென விரிந்தெழும்பும்
இன்னிசைக் பொழுதுகளில்
பறவைகள் ஆரவாரம்
அழகென விரிந்தெழுந்து
தம்பசி போக்கிவிட
தாராளம் உறுதி கொள்ளும்
அத்தகு தருணமென
அமைத்ததுவோ வேறேது
விதைதந்த பாடமலோ
விழுதாக நிண்டமுற்று
நீதானமென நிறுத்தியதே
__________
கவிஞர்
ரவிகிருஷ்ணா
Comments
Post a Comment