பாரதி
பாரதி
*******
பாரதியென்றொரு தாமரை பூத்தது
சாதியும் பேதமும் போய்விடவே
தமிழ் வேதம் முழங்கியே
விண்ணுமதிரவே பாடல் புனைந்துமளித்தவரே
இயற்கையெழிலினைப் பாடியும் நாடியும்
இயற்றமிழாகவே தந்தவனே
நல்ல பக்திப் பரவசம்
மேவியருளியே
பாங்காக பாடலும் தந்தவனே
முத்தமிழ் மண்ணில் முழங்கி இசைத்துமே அவன் புகழைச் சொல்லிப் பாடுகிறோம்
அங்கமெல்லாம் தமிழ்
உயிருணர்வாய் அல்லோ
அவன்கவி பாடவும் ஏறி நிற்கும்
சுதந்திர கீதத்தை சுந்தரமாகவே
சுவை படவெமக்குத் தந்தவனே
நல்ல நித்திலம் நாங்களும் வாழும் மட்டும் சாதி பேதம் மறந்துதான் வாழ்ந்திடுவோம்
பெண்ணடிமைத்தனம் போக்கியவன் இங்கு பெண்ணின் மகிமையுர்த்தியவன்
பல்வகையாகவே பாடல் தந்து நம்மை
பன்மைப்படுத்தி மகிழ்வித்தவன்
____________
கவிஞர்
ரவிகிருஷ்ணா
மட்/கிரான் குளம்
ஈழம்
Comments
Post a Comment