அழகுக் கோலம்
அழகுக் கோலம்
#############
வீட்டு முற்றம் தன்னிலே
விட்டமொன்று கீறியே
அழகுக் கோலம் தன்னையே
பூவையவள் போடுவாள்
பூவின் வண்ணம் காட்சியே
காலை நேரம் ஆனதும்
கண்ணியமாய் எழுந்துமே
கனத்த கோலம் போடுவாள்
அழகுமிங்க தங்கையே
மாவின் வண்ணம் கலந்துமே
மாயவித்தை செய்துமே
பூச்சி எறும்பு உன்றிட
படர்ந்த கோலம் போடுவாள்
பூத்த கன்னித் தேவதை
தானியங்கள் கூடியே
தரையைக் கொஞ்சி நித்தமே
மின்னல் கோலமாகிடும்
மீட்டும் பாவை கையாலே
வண்ண வண்ண நிறத்திலே
வடிவழகாய் இருக்கவே
கண்ட காட்சி கோலமாய்
கனவைக் கலைய வைக்குமே
__________
கவிஞர் ரவிகிருஷ்ணா
மட்/கிரான்குளம்
Comments
Post a Comment