மறைந்த தமிழர் தலைவர் கேப்டன் விஜயகாந்த்
****************************************
ஈழத் தமிழரின்பால்
இணையிலா அன்பு கொண்டு
அவர்களின் புன்னகைக்காய் காத்திருந்து
தன் பிறந்தநாளையே
கொண்டாட மறுத்து
தள்ளிவைத்த தலைமகன்
ஏழை எளியவர்பால்
எண்ணிலடங்கா
அன்பினில் விளைந்தவன்
பலரது வாழ்வு
பக்கமெல்லாம் ஒளிபெருக
பரபரப்பில்லா
பயனுறுதி கொடுத்த
பகலவன் இந்த
புரட்சியின் நாயகன்
நடிப்பில் மட்டுமல்ல
உண்மையின் முகமும்
நல் மனிதனாக செயலும் கதையும்
பாரத மாதா அழுத்து போல்
ஊடகங்கள் விட்ட கண்ணீரும்
நடிகை நடிகையர் விழிகள்
சிந்திய துளிகளும்
கேப்டன் கேப்டனென்ற வாசகமும்
மனங்களில் பள்ளிகொண்டுவிட்டன
காசு பணம் துட்டு எலாம்
வாழுவரை கதை பேசும்
அன்பு மட்டுமே நிலைகொண்டு வாழும்
நித்திய பூமியென
பல அரசியல் மேடைகளை அலங்கரித்த
மனச் சுத்திகொண்ட பேச்சு
மறுக்கமுடியாத படி மனங்களில் உறைகிறது
தன்னலமற்ற தலைவர்
தமிழ்மக்கள் நலன் ஒன்றையே நோக்கமாகக் கொண்ட தமிழின் காவலர்
கொடுத்துச் சிவந்த கரங்களுக்குச் சொந்தக்காரர்.
சொல்லொன்று செயலொன்று என்றில்லாத செயல் வீரர்
சொன்ன சொல் வழி நின்றவர். பாசாங்கில்லாத மனிதர்.
மதுரையில் பிறந்தவரு
மனசு மிக்க நல்லவரு
மன்மதனாய் உயர்த்தவரு
இவரு மனிதநேயம் கொண்டவரு
பூமியில உதித்தவரு
இவரு புண்ணியங்கள் செய்தவரு
சந்தனப் பேழையதில்
எழுபத்திரு
குண்டுகள் முழக்கமிட்டு
பதினைந்து லட்ச மக்கள்
அன்பால் விளைந்து அன்பு மிகுந்து
அஞ்சலித்துக் கிரியை செய்த
தங்கத் தலைவனிவன்
தமிழ் நாட்டில் மட்டுமல்ல
ஈழம் முதல்
தமிழர் தேசமெங்கும்
பரந்து பள்ளிகொள்ளும்
மக்கள் மனங்களெல்லாம்
வந்தேறிய வரமிவன்
அரசியல் ஞானி
ஏழைகள் தோழன்
ஈழத்தின் உத்தமன்
நித்தில முத்து
என்றும் மக்கள் மனங்களில்
நீக்குவார் தலைவன்
நிரந்தரமாக உலகை நீக்கியும்
வாழ்வான் என்றும்
மக்கள் மனங்களில்
ஆத்மா இறையின்பம் பெற்று
உய்வு பெறட்டும்
ஈழப் பெருநதி என்றும்
ஓடிக்கொண்டேயிருக்கும்
உங்களுக்காய்.......
______________
கவிஞர்
ரவிகிருஷ்ணா
கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
மட்/ கிரான்குளம்
ஈழம்
Comments
Post a Comment