புத்தாண்டு
புத்தாண்டு
************
புத்தாண்டு என்கிறார்
புதிய கதை பேசுறார்
மத்தாப்பு கையெடுத்து
மதிமயங்கி நிற்கிறார்
எக்காலம் எதுவென்று
ஏளனமாய் பேசுறார்
முடிந்த கதை முடிந்ததென்று
முசுப்பாத்தி பண்ணுறார்
பக்கமெல்லாம் படர்ந்து வந்து
பழைய கதை முடிக்கிறார்
சிட்டெனவே சிறகடித்து
சில நிமிடம் பறக்கிறார்
கண்டதெல்லாம் கையெடுத்து
கருணை மனு கேட்கிறார்
சடுதியிலே சறுக்கி நின்று
சண்டைப் பயிற்சி செய்கிறார்
தத்தித்தாவி தவழ்ந்து வந்து
தடயம் ஒன்று வைக்கிறார்
இத்தனையும் விட்டெறிந்து
இளைப்பாறுவம் என்கிறார்
மூட்டை முடிச்சு கட்டிக்கிட்டு
முடிந்த கதை பேசுறார்
அத்தனையும் சொர்க்கம் என்று
அப்படியே நிற்கிறார்
ஆசா பாசம் காட்டிக்கொண்டு
ஆலாபனை பண்ணுகிறார்
இலக்கியங்கள் பேசுகின்ற
இனிய கதை சொல்லுகிறார்
ஈடிணையாய் கதைகள் பேசி
ஈர இதயம் தருகிறார்
உள்ளதெல்லாம் உருவம் என்று
உரக்கச் சொல்லி நிற்கிறார்
ஊரும் உலகும் பேசுகின்ற
ஊக வார்த்தை சொல்லுறார்
எண்ணமெல்லாம் கதை எழுதி எப்பொழுதும் மகிழ்கிறார்
ஏணிய அதன்படியிலே
ஏனோ மயங்கி நிற்கிறார்
ஐயையோ என்று சொல்லி
ஐயப்பட்டு நிற்கிறார்
ஒன்று என்ற வார்த்தை விட்டு
ஒரு கணமாய் நிற்கிறார்
ஓதுகின்ற மொழியதாலே
ஓரஞாயம் சொல்கிறார்
ஔஷதமாம் என்று கூறி
ஔவியங்கள் பேசுறார்
________________
கவிஞர்
ரவிகிருஷ்ணா
கிரான்குளம் - 07
மட்டக்களப்பு
Comments
Post a Comment