அன்பு
அன்பு
#####
நேற்றும் இன்றும் நாளையும்
அன்புதான் ஒன்றாய்
அரவணைத்துக் கதை பேசி
தாயவள் அன்பு
சேயுடன் கதை பேசி
தந்தையின் அன்பு
தாரகை வரமாகி
பிள்ளையின் அன்பு
பிடிவாத குணமாகி
பெரியோரின் பண்போ
பேரின்ப வரமாகி
கேட்டதைக் கொடுத்தால்
அன்பாய் மலருமோ
கொட்டிய வார்த்தைகள்
விட்டெறிந்தோடுமோ
விட்டுக் கொடுத்தல்
விண்ணையும் தாண்டும்
தட்டிக் கொடுத்தல்
தரணியைக் காக்கும்
மூலை முடுக்கெலாம்
முடங்கி கிடப்பினும்
பாதை வழிதொறும்
பறந்தே கழிப்பினும்
அன்பின் துணையதே
அரவணைப்பதுவாகி
அல்லல் விட்டொரு
அருளும் தந்தேகி
முடிவுடன் கூடி நாம்
அன்பால் தேற்றுவோம்
முற்றுகையிட்டொரு
முரசமும் கொட்டுவோம்
அன்பை அன்பால்
அன்பு செய்யும்
அன்பே அன்பு
________
கவிஞர்
ரவிகிருஷ்ணா
மட்/கிரான்குளம்
Comments
Post a Comment