மகள் எழுதிய கவிதை
மகள் எழுதிய கவிதை
##################
அன்பு மகள் நெஞ்சினுக்கு
கவியொன்று நானெழுத
அதிகாலை நேரத்திலே
ஆதரவாய் எழுந்திருந்தேன்
பின்னால் ஏதோ
குறும்பொலியின் பரிசம்
வந்தாள் இருந்தாள்
சிரித்தாள் ஏதேதோ கதைகள் பேசி
அணைத்தாள்
என் தலைகள் அவள் கையிடுக்கில்
நான் என்னையே மறந்தேன்
சில கணப்பொழுதுகள்
என் எண்ணமெல்லாம்
கலைத்தாள்
நான் எழுத நினைத்தேன்
அவளைப்பற்றி
அவள் தன்னையே
எழுதிவிட்டாள்
அந்த அதிகாலைப் பொழுதினிலே
அதைவிட கவிதையுமுண்டோ
இவ்வையகத்தே
________
கவிஞர்
ரவிகிருஷ்ணா
Comments
Post a Comment