எங்கள் வீட்டின் இசை
எங்கள் வீட்டின் இசை
××××××××××××××××××××எங்கள் வீடு தன்னிலே
தட்டுமுட்டு யாவுமே
இசையைப் பேசிச் செல்லுமே
இனிய கணங்கள் தோறுமே
கதவு பாடும் கானமும்
துலா சொல்லும் வீணையும்
கருவி இலா கானமாய்
நித்த நித்தம் வீட்டிலே
நிலைத்த கதைகள் சொல்லுமே
குளிப்பு நேர நீரிலே
சலசலத்த ஓசையும்
குழந்தை மழலைப்
பாடலும்
கூவும் குயிலினோசையும்
கரையும் காக வித்தையும்
கரைந்திடாத தத்தையும்
இசையின் வடிவமாகுமே
ஆடுகின்ற மரத்திலே அழகு வண்ணம் தோன்றியே
இசைக்கும் தெனாறல் கீதமே
இனிய பாடலாகுமே
கவிஞர்
ரவிகிருஷ்ணா
Comments
Post a Comment