கூடுகட்டும் பறவை

 கூடுகட்டும் பறவை

*********************** 


காலையில் எழுந்து கனதிகள் விடுத்து

சிறியபல துரும்பெலாம் வகுத்து

பிரம்பு கோர்க்கும் கலைஞனாகி நிற்கிறது பறவையொன்று 


சிற்பியும் அசந்து போய் ஆச்சரியம் பொங்கியோங்க அகலப்பட்டுக்கிடக்கிறது

உழைக்கும் கணங்களெல்லாம் 


வித்தை காட்டும் வித்தகனா விதியுறங்கும் புத்தகனா

காற்றில் அசைந்தாடிக்களிக்கிறது 


வானத்து மேடையிலே வழிபல தேடித்தேடி

பிடித்த இடமொன்று கண்டெடுத்து 

அமைத்துக் கொள்ளுதலோ தனக்கான இருப்பிடத்தை 


தூக்கணாங் குருவிக்கூடு தூங்கித் தூங்கிநிதம்

குதுகலமாய் காற்றின் பரிசங்களை தனக்கான பரிசதாக்கி

பரிவிடை நெஞ்சினுக்கு

நல்வழி சொல்லிச் செல்லும் 


மரக்கொப்பு தன்னினுள்ளே

மரக்கிளைகள் அடுக்குப் பண்ணி

மனதாரப் பள்ளிகொள்ளும்

மற்றொரு பறவை 


இத்தனைக்கும் மத்தியில்

 எந்தன் கண்கள்

காண்பதோ 

இன்பம் மிகுந்த காட்சியோ

கோடி கோடி

____________

கவிஞர்

ரவிகிருஷ்ணா

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை