அப்பா என்பது அதிசயமான புத்தகம்
அப்பா என்பது அதிசயமான புத்தகம் ############################## அப்பா என்பது அதிசயமான புத்தகம் ஆசைகள் தீர்த்திடும் அருமையின் பெட்டகம் இன்பமே இலக்களிக்கும் இனிமையின் சட்டகம் ஈதலின் நாயகன் இணையில்லா தலைமகன் எங்கள் குடும்பத்தின் தலை மகன் உண்மையின் உயிராகி உலவிடும் நாயகர் உதிரமோ தந்தெமை உலகிலே விட்டவர் ஊரிலே அவர் பெயர் பிள்ளையால் நிலைக்கனும் என்றே என்றென்றும் உரைத்திடும் போதகர் எங்களின் எண்ணமோ எல்லாமாய் நலம் பெற ஏணியாய் உயர்ந்துமே என்றென்றும் நிற்கின்ற எண்ணமாய் உயர்ந்தவர் இவர் எல்லையில்லா காவலர் ஏக்கங்கள் தீர்த்திடும் எங்களின் பேறவர் உயர்வினில் மகிழ்ந்துமே பேரெழில் கொள்பவர் எத்தனை எத்தனை ஜென்மங்கள் எடுப்பினும் எங்களால் என்னதான் செய்யணும் தியாகமான தீபமே ஐயையோ என்று நாம் அலறிய போதிலும் அன்பாய் அவர் வந்தே அரவணைத்து நிற்பவர் எங்கள் தந்தையாம் திருமகன் இவர் குணத்திலே உ...