கிரான்குளம் விஷ்ணு பெருமானுக்கு (பாடல்)
கிரான்குளம் விஷ்ணு பெருமானுக்கு (பாடல்)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
மூவடியாலே உலகை அளந்தவன் எங்கள் மாயவனே
முற்றுமுள்ளோர்க்கு முடிவுகள் தந்தவன் கோவிந்த கோபாலனே
கிரான்குளம் மண்ணில் நித்தியமானவன் சர்வபாலகனே
சங்கு நாதத்தால் சகலதும் செய்வான் எங்கள் ஜெயஹரியே........
எங்கள் ஜெயஹரியே
காஞ்சலோசன கோவிந்தா...... சியாம சுந்தர கேசவா........
கேசவா........... கேசவா........... கோவிந்த கோவிந்த கோபாலா
மூவடியாலே உலகை....................
ஆதிதேவனாய் அமர்ந்திருந்தேயருள் தந்திடுமட்சரனே
அமிர்தென முன்பே காட்சி கொடுத்திடும் ஆனந்த சாகரனே
பாலகிருஷ்ணனாய் பள்ளி கொண்டிடும் பாலன் கோபாலனே
தேவகிநந்தனாய் அடியார்க்கருள்தரும் தர்மாதியட்சரனே
காஞ்சலோசன கோவிந்தா...... சியாம சுந்தர கேசவா........
கேசவா........... கேசவா........... கோவிந்த கோவிந்த கோபாலா
மூவடியாலே உலகை....................
ஞானேஸ்வரனாய் ஞானம் வழங்கும் காஞ்சலோசனனே
கிரான்குளத்திலே உறைந்திடக் கண்டோம் லோகாதியட்சனே
நந்தகுமாரனாய் நயனம் செய்திடும் நாராயணன் மூர்த்தியே
விஸ்வமூர்த்தியாய் வடிவில் அமர்ந்திடும்
ஆனந்தசாகரனே
காஞ்சலோசன கோவிந்தா...... சியாம சுந்தர கேசவா........
கேசவா........... கேசவா........... கோவிந்த கோவிந்த கோபாலா
மூவடியாலே உலகை....................
புருஷோத்தமனாய் புண்ணியமீந்திடும் பத்மஹஸ்தஹனே
விஸ்வரூபனாய் வினைகள் விலக்கிடும் விஸ்வகர்மகனே
பார்த்த சாரதியாய் பாண்டவர்க்கருளிய விஸ்வதட்சிணனே
சியாமசுந்தரனாய் சிரசிலமர்ந்தாய் இரண்யகர்ப்பகனே
காஞ்சலோசன கோவிந்தா...... சியாம சுந்தர கேசவா........
கேசவா........... கேசவா........... கோவிந்த கோவிந்த கோபாலா
மூவடியாலே உலகை....................
_________________________
கவிஞர்
ரவிகிருஷ்ணா
மட்/கிரான்குளம்
Comments
Post a Comment