தலை இருக்க வாலாடும்
தலை இருக்க வாலாடும்
×××××××××××××××××××××××தலைவர் என்ற பெயரெடுத்து தன்னிகராய் இருக்கையிலே மற்றொன்று உள் நுழைந்து மருவினைகள் செய்து வைக்கும்
உச்சி மீது வானமேறி
உரையெழுதும் பொழுதுமாகி
விண்ணை முட்டும் கதைகள் பேசி விதைத்து வைக்கும் மொழிபலவும்
சிங்கமான வார்த்தை கொண்டு சிரத்தின் மீதில் ஏறி நின்று
சீர்குலைந்த வார்த்தை பேசி சிறுமைத்தனம் இட்டு வைக்கும்
முந்தி நின்று மூக்கறுக்கும் முறுகலான செயலும் பண்ணும்
மூத்த வாக்கு விட்டெறிந்து
முப்பது நாள் காவலாகும்
சுற்று முற்றுடும் பார்க்க மாட்டார்
சுடர் விடவே சூழ்ந்திருப்பார்
ஆன பொருள் அறிவியல்லாம் அள்ளியள்ளி இறைத்து வைப்பார்
மின்னுகின்ற தாரகையாய் மினுமினுப்பாய் வந்து போவார்
மிச்ச சொச்சம் பார்க்க மாட்டார் மடுக்கான வேலை செய்வார்
ஐந்து விரல் கரமதனால்
அவதியுற்ற நடத்தைக் கோலம்
அல்லலுற்று தேறியபின்
அப்போதேதான் பின்னிழுப்பார்
இவ்வரிய செயலில் மட்டும் இணக்கமாகி சேவை செய்ய
எத்தனங்கள் பார்த்திருப்பார்
என்றும் இல்லா சேவகர் தான்
__________
கவிஞர்
ரவிகிருஷ்ணா
மட்/கிரான்குளம்
Comments
Post a Comment