அணை கடந்த அரசியல் வெள்ளம்
அணை கடந்த அரசியல் வெள்ளம்
############################
அன்றொரு நாள் காலையிலே ஆரவாரமாய் நான் எழும்பி
அவசரமாய் புறப்பட்டேன்
நீண்ட பயணம் செல்லவென்று
சோ என்ற மழை
சோபனமாய் பெய்யத் தொடங்கியது
எங்கு பார்த்தாலும்
வெள்ளக் காடாகி
தொப்பட்டம் தொப்பட்டம்
வானமும் பூமியும் நோக்கியபடி
என் கண்கள் அங்குமிங்கும் அலைபாய்கின்றது
இடியும் முழக்கமும்
முகாரி பாட ஆரம்பித்திருந்தன
இருப்பினும்
அடிக்கடி சூரியன்
ஓரக் கண்களை
எங்கள் பக்கம் நீட்டி நீட்டி
செல்லுகிறான்
வில்வளைவாய்
வானவில்லும் அன்நேரம்
அரும் பெரும் காட்சியாகிறது
சில கணங்கள்
பொந்தில் இருந்து
வெளியேறும் எறும்புக் கூட்டங்களாய் மனிதப் பிரளயங்கள்
அங்குமிங்கும் பிரகாசிக்க ஆரம்பித்தது
பயணங்கள் தடைப்பட்டு
பாதைகள் அடைபட்டு
வீடுகள் தோறும்
வெள்ளம் தன்னை
விளம்பரம் செய்து கொள்கிறது
அதி குளிர்தன்னில் அவதியுற்று இருப்பதற்கு கூட இடமில்லாது தவிக்கின்ற மனித நேயங்கள் சில வரிசையிட்டு தஞ்சமாகிறது
மாடி வீட்டு பாடியதனில்
மனம் நொந்தார் சிலர்
மனம் வெந்தார் பலர்
இருப்பினும் காலம் தான்
பதிலாகியது
நெட்டை கொண்ட பனை மரங்கள் நேரிடையாய் நிக்குது
வட்டி என்று வதை வதைத்து
வட்டாரங்கள் சென்றது
குச்சி ஒன்று கையில் ஏந்தி
குடையனவே சொல்லுது
மந்தி கொண்ட வாலதாகி
மரங்கள் எல்லாம் பற்றுது
மற்றவற்றை தள்ளிவிட்டு
மர்ம மனம் கொதிக்குது
மனிதனுக்குள் பிரளயங்கள்
மறுபடியும் நடக்குது
_________
கவிஞர்
ரவிகிருஷ்ணா
மட்/கிரான்குளம்
Comments
Post a Comment