கிரான்குளம் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் சாதனையாளர் விழா 2025
கிரான்குளம் கல்வி அபிவிருத்தி சங்கத்தினர் (KEDS) நடாத்திய வருடாந்த சாதனையாளர் பாராட்டு விழா- 2025 கடந்த புதன் கிழமை (2025.11.05) மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது
சீமூண் காடன் மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் திரு.கி.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முதன்மை அதிதியாக மேனாள் கிழக்குப் பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் வ.கனகசிங்கம் அவர்களும் விசேட அதிதிகளாக மண்முனை பிரதேச கௌரவ தவிசாளர் திரு.கா.செந்தில்குமார் அவர்களும் கௌரவ அதிதிகளாக கிரான்குளம் கிராம பாடசாலைகளின் அதிபர்களும் Blossom Trust இணைப்பாளர் திரு.பு.மணிவண்ணன் அவர்களும் அழைப்பு அதிதிகளாக கிரான்குளம் கிராமத்தின் கிராம அலுவலர்களும் கிரான்குளம் கிராம பாடசாலைகளின் அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர்களும் பழைய மாணவர் சங்க செயலாளர்களும் கலந்து கொண்டதுடன் தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் வெட்டு புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களும் க.பொ.த (சா/த) பரீட்சைக்குத் தோற்றி 9A, 5A க்கு மேல் பெற்றோர், 6C க்கு மேல் பெற்றோர், பல்கலைக்கழக அனுமதி பெற்றோர், மற்றும் மாகாண தேசிய சாதனைகளை இணைப்பாட விதானங்களில் புரிந்தோர், இலங்கை ஆசிரியர் கல்வியிலாளர் சேவைக்கு தெரிவு செய்யப்பட்டோர் (SLTES), இலங்கை கல்வி நிர்வாக சேவைக்கு தெரிவு செய்யப்பட்டோர் (SLEAS) என பலரும் கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
























Comments
Post a Comment