ஒட்டுண்ணி
ஒட்டுண்ணி
##########
சில ஒட்டுண்ணிகள்
தங்களை பரீட்சையப்படுத்திக்
கொள்கிறது
நாளுக்கு நாள் உயரும் வேகத்தில்
விலைவாசியும்
சிலவேளை அப்படித்தான்
நீண்டதொரு சரித்திரம்
எழுத காத்திருக்கும்
வரலாறு
தன்னை சிலவேளை
மீட்டி மீட்டி பார்க்கிறது
எங்கள் வீட்டு
செல்லப்பிராணி
பேசும் கதையும்
இதுதான்
நிம்மதி இழந்து
நித்தமும் துடிதுடிப்பு
அந்த ஒட்டுண்ணிகளுக்கான
மருந்து செய்யும் நாட்கள்
தொலைவில் இல்லை
நிலை மாறுகின்ற
உலகில்
நித்தமும் எத்தனையோ
கற்பிதங்கள்
காட்சியும் கானமுமாய்
மனதை தொட்டுச் செல்கின்றன
பூத்திருக்கும் செடியையும்
விடாத ஒட்டுண்ணி
இன்னமும் அதன் ஆணிவேர்களுக்கு இறங்கவில்லை
ஏனெனில்
அதுதான் அதன் பாதுகாப்பு
நாளை மலரப்போவது
பூந்தோட்டமோ
புரவியீட்டத்தின் புழுதியோ
மதங்கொள் யானைகள்
இன்னமும் பொறுமை காத்துக் கிடக்கின்றன
வேறொன்மில்லை
ஒட்டுண்ணிகளுக்கு பரிசம்
போட்டிடத்தான்
___________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா
Comments
Post a Comment