நகம் (வளரி)
நகம் (வளரி)
##########
வெட்டி வெட்டி வீழ்த்தி
விரல்களுக்கு
அழகு சேர்க்கும் சிலருக்குள்
இணைந்து வளர்ந்து
அழகாய் வர்ணணம் பூசி அலங்கரிக்கப்பட்டிருக்கிறேன்
பலருக்குள்
இருப்பினும்
என்றோ ஒருநாள்
என் குணம் கூறி
தெரியத்தான் போகிறது
அன்று தான் தெரியும்
என் பக்க விளைவுகள்
அதற்குள் இருக்கும்
அழுக்குகள் யாவும்
உடலை மட்டுமல்ல
உணர்வுகளையும்
வருத்தும் காலம்
நீண்ட பயணம்
எடுக்கப் போவதில்லை
________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா
Comments
Post a Comment