பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி குழந்தை பிறந்தது முதல் பாடசாலைக் கல்வி முடியும் வரையுள்ள மிகவும் நீண்டதொரு காலப்பகுதியை தமது வளரும் காலமாக கொண்ட குழுவினரே பிள்ளைகள் என உளவியலாளர்கள் கருதுகின்றனர். பிள்ளையின் வளர்ச்சி என்பது கூறுகூறுகளாக ஏற்படுவதில்லை அது கற்றலுடன் சம்பந்தப்பட்ட முழுமையான வளர்ச்சியாகும். வளர்ச்சியும் கற்றலும் சேர்ந்த ஒரு முழுமையான விருத்தியிலே தான் ஒரு பூரணமான பிள்ளையை உருவாக்க முடியும். இத்தகைய இம்முழுமையான வளர்ச்சியினுள் பல கூறுகள் இணைந்துள்ளன அவற்றை நாம் ஐந்து கூறுகளாக நோக்கலாம் 1. உடல் வளர்ச்சி. 2. உள வளர்ச்சி. 3. மனவெழுச்சி வளர்ச்சி. 4. சமூக வளர்ச்சி. 5. ஒழுக்க வளர்ச்சி. எனவே பிள்ளை விருத்தி என்பது விருத்திப் போக்கின் ஒவ்வொரு பருவங்களிலும் உடல், உள, மனவெழுச்சி, சமூகம்சார், ஒழுக்க வளர்ச்சிகள் ஆகியவற்றில் ஏற்படும் முழுமையான, நிறைவான செயற்பாடாகும். இவற்றுள் மனவெழுச்சி என்பது உணர்ச்சி என்பதிலும் வேறுபாடானது. இது தூண்டல்களால் தூண்டப்படுகின்ற மனநிலையாகும் என ஸ்கின்னர் (1938) போன்ற நடத்தை வாதிகள் குறிப்பிடுகின்றனர...
ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம் 1. இக்காலத்தில் உள்ள ஈழத்துப் பூதந்தேவனார் பற்றிய குறிப்புக்கள் எவை? • இவர் ஈழத்திலிருந்து தமிழ் நாட்டிற்குச் சென்று மதுரையிலே தங்கியிருந்து பாடல்களை இயற்றியுள்ளார் என அறிய முடிகின்றது. • இவர் எழுதிய 07 பாடல்கள் குறுந்தொகை (180,343,360), நற்றிணை (360), அகநானூறு (88, 231, 307) என்பவற்றிலுள்ளன. 2. ஈழத்துப் பூதந்தேவனாரை ஈழத்தவராக ஏற்றுக்கொள்வதற்கும், மறுப்பதற்குமாக முன்வைக்கப்படும் கருத்துக்களைத் தருக. ஏற்றுக்கொள்ளக் காரணங்கள் • பட்டினப்பாலையில் ஈழம் இலங்கையைக் குறித்தல் நீண்ட கால கலாசார பண்பாட்டுத்தொடர்பு இலங்கைக்கும் தமிழகத்திற்கும் இடையே நிலவுதல் • புவியியல் ரீதியாக தமிழகம் அண்மையில் உள்ளதால் புலவர் அங்கு சென்று வாழ்ந்திருக்கலாம். • நிலைபேறான ஆட்சி இன்மையால் ஈழத்தில் புலவரை ஆதரிப்பவர் இன்றி அவர் தமிழ்வளர்த்த மதுரைக்கு சென்றிருக்கலாம். மறுக்கக் காரணம் போதிய அகச்சான்றோ, புறச்சான்றோ பாடலில் இல்லை ஈழம் என தமிழகத்தில் உள்ள ஒரு பிரதேசத்தையும் குறிக்கும் வழக்கம் (ஈழவன்கேசரி) இருந்துள்ளமை 3. இ...
சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை பொதுவாக நோக்குகின்ற போது கல்வியியலாளர்கள் என்ற வகையில் பிள்ளை வளர்ச்சி, பிள்ளையின் மனோ நிலை, பிள்ளையை கையாளுதல் முதலான விடயங்கள் பற்றி பலர் ஒருமித்த கருத்துக்களைத் தெரிவித்திருந்தாலும் குறிப்பிடத்தக்க சில கல்வியியலாளர்களே சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் தொடர்பாக தமது கருத்தினைத் தெரிவித்திருக்கின்றனர். ரூசோ சிறுவர்களுக்கான தண்டனை பற்றிய தனது கருத்தில் 'பிள்ளைகளை ஒரு போதும் தண்டிக்கக் கூடாது ஆனால் தம் தவறுகளின் இயற்கையான விளைவுகளை அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று குறிப்பிட்டிருக்கின்றார். ரூசோவின் கருத்துப்படி பிள்ளைக்கான கல்வி பிள்ளையை மையப்படுத்தியதாக இருத்தல் வேண்டும். என்பது அவர் கூறிய 'தவறுகளின் இயற்கையான விளைவுகளை பிள்ளைகள் கற்றுக் கொள்ளல் வேண்டும்' என்பதிலிருந்து அறியக்கூடியதாக உள்ளது. அதாவது தவறுகளால் ஏற்படக்கூடிய விளைவுகளை மாணவர்கள் கற்றுக்கொள்வதன் மூலம் தவறிளைப்பதிலிருந்து அவர்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் செய்ய இருக்கின்ற செயற்பாடுகளை...
Comments
Post a Comment