படகுப் பாதையும் பருவப் சீட்டும்

 படகுப் பாதையும் பருவப் சீட்டும்

##########################

இடைவிடாத சலனங்களுக்கு மத்தியில் ஏறுகின்றேன்
படகுப் பாதையொன்றில்
ஆகா என்ன அதிசயம்
இன்னமும் முன்னேறாத
துறையென்றால் அதுவாகத்தான்
இருக்குமென்று முணுமுணுப்பு

இதில் பயணமாக
கத்தரிக்கோல் ஒன்று
கட்டாயம் வாங்க வேண்டும்
கூடவே குறுங்
கடதாசிப் பையும்

வேறென்ன எல்லாம்
யந்திர மயமாகும் ஏற்றத்தில்
பருவகால சீட்டொன்று
புத்தகம் புத்தகமாய்
பயணர்கள் கைகளதில்
பயணச் சீட்டுக்கள்

அதில் கையொப்பமிடும்
அதிகாரிக்கு கைகளில்
ஒத்தடம் கொடுக்கவேண்டும்
என்றாலும்
தவறில்லை
அத்தனை சீட்டுக்கள்

QR வெட்கப்பட்டு
வெளியில் வராது
கையுள் சுறுண்டபடி
செல்லப் பராணியாகி
உறகத்தில் இன்னமும்
பயணிகளின் கைத்
தொலை பேசிகளுக்குள்
முடங்கிய படி இசைக்கிறது
கானம்

இதற்கிடையில்
பாதையின் யந்திரம்
போடுகின்ற சத்தம்
அதன் சந்தம்
மாறுமோ கீறுமோ என்று
வேறு ஒரு கானம் இசைப்பதற்காய் பாட்டு பெட்டியை தன்னுள் வைத்து இசைக்கின்றார் தானும் பாதையொட்டி

சரியாகத்தான் நடக்கிறது
எல்லாம்
கண்காணிக்கிறார்
தம்பி
கண்காணிப்பு கருவி வேறு
அது யந்திரம் தான்
கேட்கப்படாது கேள்வி
நாங்கள் செய்வதை
செய்வோம்
பயணமாக மட்டும்
கத்தரிக்கோலும் கையுமாக
வாருங்கள் இல்லாட்டி
நீங்க சுத்து வயல்
சும்மா தூரம் இல்ல

அடித்துப் பிடித்து
ஓடிவந்து
அவசரமாய் வெளிக்கிட்டு
பாதையில ஏறிநானு
பருவச்சீட்டத் தேடிப் பாத்தா
அடுத்த களிசன்
பைக்கட்டுள்ள அப்படியே
இருக்குதெண்டு
ஐம்பது ரூபா நோட்டு
சொல்லி
அழகாக சிரித்தபடி
வெளியேறிவந்து ஒரு
புதுக்கதைய சொன்னதன்று
இப்படி
ஒரு நாள்
இரு நாள் இல்ல
பல நாட்கள் சங்கதிகள்
__________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா 

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை