கிராமிய கலைகளை வளர்ப்பதில் ஆலயங்களின் பங்கு
கிராமிய கலைகளை வளர்ப்பதில் ஆலயங்களின் பங்கு
ஆலயங்கள் தமிழர் வாழ்க்கையில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளன. அவை வெறும் வழிபாட்டு மையங்களாக மட்டுமல்லாமல், சமூக, பண்பாட்டு மற்றும் கலைச்சார்ந்த வளர்ச்சிக்கும் அரிய தளமாக இருந்து வருகின்றன. குறிப்பாக கிராமிய கலைகள் வளர்ச்சியடைவதற்கு ஆலயங்கள் ஒரு மையமாக இருந்து வருகின்றன.
மக்கள் பெருமளவில் கூடும் திருவிழாக்கள், ஊர்திருவிழா, ஆண்டுத் திருவிழா போன்ற நிகழ்வுகள், கலைஞர்களுக்கு தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்துகின்றன. ஆலயங்களைச் சுற்றியுள்ள தெருக்களில் நடைபெறும் ஊர்வலங்கள், கரகாட்டம், பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு, தெருக்கூத்து போன்ற கிராமியக் கலைகளுக்கு உயிரூட்டுகின்றன.
ஆலயங்களில் நடைபெற்ற இசை, நடனம், நாடக நிகழ்ச்சிகள், மக்கள் மத்தியில் கலை உணர்வை பரப்புவதோடு, கலைஞர்களுக்கு சமூக அங்கீகாரத்தையும் வழங்குகின்றன. இதன் மூலம் கிராமியக் கலைகள் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு பரிமாறிக் கொண்டு வந்துள்ளன.
மேலும், ஆலயங்கள் கலைஞர்களுக்கு பொருளாதார ஆதரவையும் அளித்து வருகின்றன. நன்கொடைகள், பரிசுகள் ஆகியவை கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்றன. அத்தோடு, மக்கள் மற்றும் கலைஞர்கள் இடையே நேரடி தொடர்பு ஏற்படுத்தும் தளமாகவும் ஆலயங்கள் திகழ்கின்றன.
இதனால், ஆலயங்கள் கிராமியக் கலைகளை பாதுகாப்பதிலும், வளர்ப்பதிலும், பரப்புவதிலும் பெரும் பங்காற்றி வருகின்றன. அவை நம் பண்பாட்டின் காப்பகங்களாக இருந்து, பாரம்பரியத்தை நிலைநிறுத்துகின்றன.
கவிஞர் ரவிகிருஷ்ணா
கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்
மட்/கிரான்குளம்
Comments
Post a Comment