பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி
பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி குழந்தை பிறந்தது முதல் பாடசாலைக் கல்வி முடியும் வரையுள்ள மிகவும் நீண்டதொரு காலப்பகுதியை தமது வளரும் காலமாக கொண்ட குழுவினரே பிள்ளைகள் என உளவியலாளர்கள் கருதுகின்றனர். பிள்ளையின் வளர்ச்சி என்பது கூறுகூறுகளாக ஏற்படுவதில்லை அது கற்றலுடன் சம்பந்தப்பட்ட முழுமையான வளர்ச்சியாகும். வளர்ச்சியும் கற்றலும் சேர்ந்த ஒரு முழுமையான விருத்தியிலே தான் ஒரு பூரணமான பிள்ளையை உருவாக்க முடியும். இத்தகைய இம்முழுமையான வளர்ச்சியினுள் பல கூறுகள் இணைந்துள்ளன அவற்றை நாம் ஐந்து கூறுகளாக நோக்கலாம் 1. உடல் வளர்ச்சி. 2. உள வளர்ச்சி. 3. மனவெழுச்சி வளர்ச்சி. 4. சமூக வளர்ச்சி. 5. ஒழுக்க வளர்ச்சி. எனவே பிள்ளை விருத்தி என்பது விருத்திப் போக்கின் ஒவ்வொரு பருவங்களிலும் உடல், உள, மனவெழுச்சி, சமூகம்சார், ஒழுக்க வளர்ச்சிகள் ஆகியவற்றில் ஏற்படும் முழுமையான, நிறைவான செயற்பாடாகும். இவற்றுள் மனவெழுச்சி என்பது உணர்ச்சி என்பதிலும் வேறுபாடானது. இது தூண்டல்களால் தூண்டப்படுகின்ற மனநிலையாகும் என ஸ்கின்னர் (1938) போன்ற நடத்தை வாதிகள் குறிப்பிடுகின்றனர...






Comments
Post a Comment