மட்டு நகர் ஔவை விழா =======================

 மட்டு நகர் ஔவை விழா

=======================


மட்டு நகர் மண்ணிலல்லோ மலர்ந்ததொதரு ஔவை விழா

அறிவினுக்கு தாயவளாய் 

மலர்ந்தவட்கு தமிழில் விழா

மங்கையரின் மேன்மையோங்கும் 

நன்மையுறு நாளதாகி

மொழியின்தாய் ஔவைதனை

வாழ்த்துகின்ற  வேள்வியிது


கதிரவன் பட்டிமன்றப்

பேரவையின் ஆதரவாய்

வேல்முருகன் சகோதரர்கள்

அனுசரணை வகுத்திருக்க

நல்லதொரு பொற்காலம்

ஔவையவள் விழாவினுக்கு


தமிழ் தாயின் தழுவலிலே 

இன்பமது பொங்கிவந்து

சிறுமியவர் செல்வமென 

சொற்குவாய் நெஞ்சம் தாங்கி

ஔவையம்மை வாழ்வியலால்

தமிழ் மணம் கமழ்ந்திருக்க

மீன்பாடும் வாவியோரம்

விழித்தெழட்டும் விசித்திரமாய்


நடனமிசை நாடகமும் 

கலப்புமிகு செழுமைசெய்து

நல்லவையை வளர்த்துவிடும் 

விழாவிதுவாம் ஔவை விழா 


மாணவர்பால் மனதிலே 

தீபமேற்றி

மணி மொழியால் மரபுநிறை

சாயல் வீசி

மாட்டு நகர் தேசமெலாம்

ஔவையவள் நமமதாய்

ஒளிக்கீற்று பிரகாசித்து

புதமைதரப் போகிறது


வாருங்கள் 

கூடுங்கள்

ஒன்றுகூடி

கை கோருங்கள்

தமிழும் ஒருகணம்

உங்களை வணங்கிச்

செல்லட்டும்


__________________________

கவிஞர் ரவிகிருஷ்ணா

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை