பறவை 🐦 (பரவை)
பறவை 🐦 (பரவை)
🐦🐦 🐦🐦 🐦🐦 🐦🐦
பருந்தது பறக்க
காகமோ மிதக்க
மைனாவின் வீட்டில்
மாநாடு
பருந்திற்கு இடமில்லை
காகத்தின்
தலைக்கு மட்டும்
அனுமதி
பிணம் தின்னிகள்
சுற்றித் திரிந்து
காகத்தின்
உடல் கண்டு
கழுகெனப் பறக்கும்
இதற்குள்
சோர்வு கொஞ்சம்
பருந்துக்கு
நாளைய நாளையெண்ணி
அந்தி சாந்தி
எல்லாமே அலைந்தபடி
தனது கூட்டை தேடுகிறது
மரத்தையே காணவில்லை
நிற்பது வேடன் மட்டும் தான்
__________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா
Comments
Post a Comment