ஔவை விழா பாடல்

 


ஔவை விழா பாடல் 

#################


ஔவை விழா ஔவை விழா 

ஔவை விழாதமிழ் அன்னைவிழா


மீன் பாடும் தேனகத்தில்

மீளுகின்ற வாசகத்தில்

கதிரவனே இயற்றுகிறான் 

கானமது இசைத்தபடி

தென்றலதன் வாசகத்தில் 

தேடுகின்ற தாயகத்தில் 

வேல்முருகன் சகோதரர்கள் 

 வழங்குகிறார் அனுசரணை

வழங்குகிறார் அனுசரணை


ஔவை விழா ஔவை விழா ....


தமிழ் மணக்கும் சாயலிலே 

தரமுயர்ந்த பாடலிலே 

கலைபலவும் காணுகிறார் 

தேனகத்தின் வாசலிலே

பூத்திருக்கும் மலர்களவை

புதுமணமாய் வீசி வர

வில்லிசைத்த பாடலதும்

வெற்றி மாலை சூடி வரும்

வெற்றி மாலை சூடி வரும்


ஔவை விழா ஔவை விழா ....


பட்டிமன்ற பேரவையின் 

ஔவை விழா அவையுமல்லோ

கூடி நின்று கை கொடுப்பார் 

குவயங்கள் தான் மறப்பார் 

நெஞ்சினிலே நினைவிருக்க 

நேசம் கொண்ட மலருக்க 

ஔவை விழா மலச்சியிலே

ஆனந்த களிப்பு வரும்

ஆனந்த களிப்பு வரும்


ஔவை விழா ஔவை விழா ....


___________________________

கவிஞர் ரவிகிருஷ்ணா

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

கிரான்குளம் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் சாதனையாளர் விழா 2025