Posts

Showing posts from June, 2026

அம்மா எனும் ஆழமான வரிகளுக்குள்

Image
 அம்மா எனும் ஆழமான வரிகளுக்குள் ############################### அம்மா எனும் ஆழமான வரிகளுக்குள் ஆயிரம் பாசைகள் புகுந்து  அத்தனையும் அழகாய் செய்து  அதன் வழியில் நம் வாழ்வை  அழகு படுத்திக் கொண்டிருக்கின்ற  அன்பு பாசம் நிறைந்த ஒரு  பரிசளிப்புத்தான் எங்கள் அம்மா காலையில் எழுவாள் கடமைகள் முடிப்பாள் உரிய வேளைக்கு உணவது கொடுக்க  அடுப்படியிலவள் நெருப்போடு போராடி புள்ளாங்குழலால் புகாரிபாடி  புகையின் நடனமும் பழக்கம் அவளுக்குள் நின்றபாடில்லை கண்ட இடத்தில் கழட்டி எறிந்த கந்தைகளெல்லாம் கசக்கிப்போட்டு கனதிகள் செய்வாள் புதியதாய் மின்னும் புத்தாடையாய் பிள்ளைகள் அணிய கண்கொளாக் காட்சியாய் மகிழ்ந்து களிப்பாள் விளக்குமாறின் விட்டத்தடியெல்லாம் அம்மா கையின் பக்குவம் பேசி வீட்டு முற்றத்தின் விடுகதையாகி  அவள் அளித்திட்ட பச்சயங்கள் யாவும் ஒருநிலை கொண்டு உச்சியே வளர்ந்து இருக்கின்ற பலாமர நிழலில் பாயில்லாமலே படுத்திடத் தூண்டும் பிள்ளையின் சாகசம் பிறறவர் கூற  பித்து பிடித்த மகிழ்ச்சி அவளுக்குள்  யாரிடம் சொல்வதோ யாரிடம் கேட்பதோ என்று தன்னை அறியாத  தரமிகுந்த...

கிரான்குளம் காளியம்மனுக்கு காவியம்

Image
 கிரான்குளம் காளியம்மனுக்கு காவியம் ஆக்கம் :- கவிஞர் ரவிகிருஷ்ணா  திரு.கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்  மட்/கிரான்குளம் "தந்தநத நாதனத நாதநத நானா  தனநாத நாதந்த நாதந்த நானா"  "தந்தநத நாதனத நாதநத நானா  தனநாத நாதந்த நாதந்த நானா"  ​ மங்கலமதாய் விளங்கும் கிரான் குளத்தூர் மாதே  மடிமீது துயர்நீக்கும் மாசற்ற கோவே திங்களணி வேணியனின் கண்வளர்ந்த காளி  திகழ்கின்ற ஆற்றங்கரை வாழும் காளியாம் தாயே! சந்தமுடன் உன்னடியைப் போற்றிடவே வந்தோம்  சகலவினை தீர்த்தருளும் சங்கரியே தாயே பந்தமுறும் பாசமதை வேரறுக்கும் வேலே பரம்நீயே பத்திரகாளி பாதம்நமக் கரணே! ஆடிமாதத் திங்களிலே திருச்சடங்கு காண அகிலமெல்லாம் போற்றிநிற்கும் அன்னை பத்ரகாளி தேடிவரும் பக்தர்களைக் காத்தருளும் தேவி  தீமிதித்து உன்னருளைப் பெற்றிடவே செய்வாய்! மடையெடுப்பு நல்நாளில் மங்களங்கள் பொங்க  மாவிளக்கு ஏந்திநிற்கும் மாந்தரையே காப்பாய் புடைசூழும் பக்தர்களின் பசிப்பிணிகள் தீர்க்கும் புண்ணியமே பொன்னடியே போற்றிநின்றோம் நாமே! ​ ஆற்றங்கரை ஓரத்திலே ஆலயமும் கொண்டாய்  ஆனந்தக் கூத்தாடும் அன்னைபத் ரகாளி காத்து...