கிரான்குளம் காளியம்மனுக்கு காவியம்


 கிரான்குளம் காளியம்மனுக்கு காவியம்


ஆக்கம் :-

கவிஞர் ரவிகிருஷ்ணா 

திரு.கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் 

மட்/கிரான்குளம்


"தந்தநத நாதனத நாதநத நானா 

தனநாத நாதந்த நாதந்த நானா" 


"தந்தநத நாதனத நாதநத நானா 

தனநாத நாதந்த நாதந்த நானா" 


​

மங்கலமதாய் விளங்கும் கிரான் குளத்தூர் மாதே 

மடிமீது துயர்நீக்கும் மாசற்ற கோவே

திங்களணி வேணியனின் கண்வளர்ந்த காளி 

திகழ்கின்ற ஆற்றங்கரை வாழும் காளியாம் தாயே!


சந்தமுடன் உன்னடியைப் போற்றிடவே வந்தோம் 

சகலவினை தீர்த்தருளும் சங்கரியே தாயே

பந்தமுறும் பாசமதை வேரறுக்கும் வேலே பரம்நீயே பத்திரகாளி பாதம்நமக் கரணே!


ஆடிமாதத் திங்களிலே திருச்சடங்கு காண அகிலமெல்லாம் போற்றிநிற்கும் அன்னை பத்ரகாளி

தேடிவரும் பக்தர்களைக் காத்தருளும் தேவி 

தீமிதித்து உன்னருளைப் பெற்றிடவே செய்வாய்!


மடையெடுப்பு நல்நாளில் மங்களங்கள் பொங்க 

மாவிளக்கு ஏந்திநிற்கும் மாந்தரையே காப்பாய்

புடைசூழும் பக்தர்களின் பசிப்பிணிகள் தீர்க்கும் புண்ணியமே பொன்னடியே போற்றிநின்றோம் நாமே!


​

ஆற்றங்கரை ஓரத்திலே ஆலயமும் கொண்டாய் 

ஆனந்தக் கூத்தாடும் அன்னைபத் ரகாளி

காத்துநிற்கும் பக்தர்களின் கவலைகளைத் தீர்க்கும் 

காரணியே நாரணியே கண்பாராய் நீயே!


​

மண்ணுலகில் தீமைகளை மாய்த்திடவே வந்தாய் 

மாசற்ற சோதியாய் மாநிலத்தில் வந்தாய்

விண்ணவரும் போற்றிநிற்கும் வீரமுள தாயே 

விக்னங்கள் தீர்த்தருளும் விமலையே போற்றி!


​

சிங்கமுக வாகனத்தில் சீற்றமுடன் ஏறி தீயோரை அழித்திட்ட தெய்வமே காளி

மங்களமாய் எம்குலத்தை வாழவைக்கும் தாயே 

மடிப்பிச்சை தந்தெம்மைக் காத்தருள்வாய் நீயே!


சூலமதும் வாளமதும் கைகளிலே ஏந்தி சூரர்களை வென்றழித்த சுந்தரிநற் காளி

காலமெல்லாம் உன்பாதம் நம்பிநின்றோம் அம்மா 

கனிவோடு எம்குறைகள் தீர்த்தருள்வாய் நீயே!


கிரான்குளத்தூர் மண்ணினிலே காவலாய் நின்றே 

கீர்த்தியினைத் தந்திடுவாய் கிருபைசேர் தாயே

வரமளிக்கும் வள்ளலே வாலைபத்ரகாளி வாழையடி வாழையாய் வாழவைப்பாய் எம்மை!


ஆடித் திருநாளினிலே உன்னருளை வேண்டி 

ஆங்கிருக்கும் மாந்தரெல்லாம் கூடிநின்றார் அம்மா

தேடிவரும் ஏழைகளின் நெஞ்சமதில் வாழும் தேவியே பத்திரகாளி திக்கனைத்தும் காப்பாய்!


மடையெடுத்து உன்னடியில் மண்டியிட்டு நின்றோம் 

மங்காத வாழ்வதனைத் தந்திடுவாய் அம்மா

சடையுடைய ஈசனின் சக்தியாய் நின்றாய் சங்கடங்கள் தீர்த்தருளும் சாம்பவியே போற்றி!


நெருப்பதனில் கால்பதித்து நேர்த்திக்கடன் செய்ய நெஞ்சார உனைவேண்டி நிற்கின்றோம் அம்மா

நெருப்பினைப் பூவாக்கி நெஞ்சமதைக் காக்கும் நின்கருணைக்கு ஈடேதும் நினையுலகில் இல்லை!


கங்காளன் தேவியவள் காளியாய் வந்தாள் 

காரிருளை நீக்கிடும் பேரொளியாய் நின்றாள்

சிங்கார ஆற்றங்கரைச் சீர்மிகுந்த கோவே சிந்தாகுலம் தீர்க்கும் செல்வியே போற்றி!


பஞ்சாட்சரப் பொருளாய் பாரினில் நின்றாய் 

பாவங்கள் போக்கிடும் பார்வதியே தாயே

அஞ்சிலன் றேகையினாலுமே காக்கும் 

அன்னை பத்ரகாளி அடிபணிந்தோம் நாமே!


பக்தர்களின் கூக்குரலைக் கேட்டிடுவாய் அம்மா 

பதறாமல் ஓடிவந்து காத்திடுவாய் நீயே

முக்கண்ணன் பெற்றெடுத்த மூலப் பரம்பொருளே 

முக்தியினைத் தந்திடுவாய் பத்திரகாளி தாயே!


தங்கமணி மார்பினிலே தாங்கியநற் கோவே 

தரணியெல்லாம் போற்றுகின்ற தாயேபத் ரகாளி

மங்களமாய் ஊரினுக்கு நல்வாழ்வு தந்து மாரிமழை பொழிவித்து மகிழ்விப்பாய் எம்மை!


வேப்பிலை ஆடையுடன் வீதியுலா வந்து வேதனைகள் தீர்த்தருளும் விமலையே தாயே

தீப்பாயும் பக்தர்களின் தீவினையைத் தீர்க்கும் 

தீனதயாளியே பத்திரகாளி போற்றி!


செவ்வரளி மாலையணி செல்வியே தாயே 

செம்மைசேர் வாழ்வதனைத் தந்திடுவாய் நீயே

ஔவைக்கு அருளிய ஆற்றங்கரை வாழும்

அம்மையே பத்திரகாளி பாதமே சரணே!


மும்மூர்த்தி தேவர்களும் போற்றிநிற்கும் தேவி 

மும்மலங்கள் அறுத்திடும் மோகனநற் காளி

நம்வினை தீர்த்திடவே நாடிவந்தோம் அம்மா 

நல்லருளைத் தந்திடுவாய் நாயகியே நீயே!


ஆற்றங்கரைத் தென்றலிலே ஆலயம் கொண்டாய் 

ஆன்மாவின் ஜோதியாய் அங்கெழுந்து நின்றாய்

பூத்தமலர் தூவியுன்றன் பொன்னடிகள் போற்றினோம் 

புண்ணியமே பத்திரகாளி போற்றிபோற்றி அம்மா!


திருச்சடங்கு காணவரும் திசையனைத்து மாந்தர் 

தீங்கின்றி வாழ்ந்திடவே தீர்க்கமாய் அருள்வாய்

மருச்சடங்கு தீர்த்தெம்மை மாண்புறவே செய்யும் மாதாவே பத்திரகாளி மாமயிலே போற்றி!


கும்பமேந்தி ஆடுகின்ற கோலமதைக் காண 

கண்கோடி வேண்டுமம்மா காளியே தாயே

நம்பியுன்றன் நாமமதை நாவில்நவின்றோர்க்கு 

நல்வாழ்வு தந்திடுவாய் நாயகியே நீயே!


உடுக்கை ஒலியினிலே உள்ளமகிழ்ந்தே நீ உன்மத்த மாய் ஆடும் உத்தமியே காளி

இடுக்கண்கள் வாராமல் எம்குலத்தைக் காக்கும் 

ஈஸ்வரியே பத்திரகாளி இணையடியே சரணே!


மடைபரப்பி உன்னடியில் மங்கலங்கள் கேட்கும் 

மானிடர்தம் குறைகளையே மாய்த்திடுவாய் அம்மா

குடைபிடித்து உன்னருகே கொற்றவளாய் நிற்கும் 

குங்குமநாயகி பத்திரகாளி கண்பாராய் நீயே!


கல்லூரி வீதியிலும் காப்புமிட்டே நிற்கும் காவியத் தாயேபத் ரகாளி போற்றி

பல்லூழி காலமும் பாரினைக் காக்கும் பரமான பத்திரகாளி பாதமே சரணே!


தீக்குழியில் இறங்கியுன்றன் பேரருளை வேண்ட 

தீராத நோயனைத்தும் தீர்ந்திடுமே அம்மா

காக்கும் கரமுடையாய் காளியே தாயே காலனை வென்றிடவே நல்வரமே தா தா!


நாற்றிசையும் போற்றுகின்ற நாதவடி வானாய் 

நான்மறைகள் ஓதுகின்ற நாயகியே நின்றாய்

ஆற்றங்கரை ஓரத்து தீவமர்ந்த கோவே அன்னை பத்ரகாளி அடிபணிந்தோம் நாமே!


சந்தனப் பொட்டிட்டு குங்குமமும் சூடி சர்வலங் காரமுடன் காட்சியளிப்பாய் தாயே

பந்தபாசக் கட்டறுத்துப் பேரருளைத் நல்கும் 

பராசக்தி பத்திரகாளி பாதமே சரணே!


அஞ்சுகரத் தானவனின் அன்னையாய் நின்றாய் 

ஆறுமுகன் தம்பியே நல்வழியே தந்தார்

நெஞ்சினில் உனைநினைத்து நின்றாடும் பக்தர்க்கு 

நல்வாழ்வு தந்திடுவாய் பத்திரகாளி தாயே!


ஈரேழு லோகமும் ஏற்றிடும் ஈஸ்வரியே இடர்நீக்கும் வல்லமையே இன்சுவையே தாயே

காரேறு மாமுகிலாய் கருணைபொழி காளி 

காத்துநின்றோம் உன்னடியில் கண்பாராய் நீயே!


ஆடிச் செவ்வாயினிலே ஆராதனை செய்ய 

அகிலமெல்லாம் ஓடிவந்து போற்றிடுமே அம்மா

தேடிவரும் நல்லவர்க்குத் தெய்வமாய் நின்றாய் 

தேவியே பத்திரகாளி திக்கனைத்தும் காப்பாய்!


மங்கல ஒலியெழுப்ப மாதரெல்லாம் கூட மடைதிறந்த வெள்ளமதாய் உன்னருளும் பாயும்

செங்கமலப் பாதமதைச் சிந்தையினில் வைத்தோம் 

செல்வங்கள் தந்து எமைச் சீராட்டு தாயே!


ஆற்றங்கரை மணலில் ஆலயம் கொண்டாய் 

ஆன்மாவின் தாகமதைத் தீர்த்திடுவாய் அம்மா

நாத்திகமும் நீக்கியே நல்வழியே காட்டும் நாரணியே பத்திரகாளி நாடிவந்தோம் உன்னை!


வீரமுடன் சிங்கத்தின் மீதமர்ந்து வந்தாய் வினைகளையே தீர்த்தருளும் விமலையே தாயே

ஆரமுடன் உன்னருளை அள்ளித்தரும் காளி அடியாரைக் காத்தருளும் அன்னையே போற்றி!


தீமிதித் திருவிழா தேசமெங்கும் பேச தேவியுன்றன் பேரருளால் சீர்பெறுவோம் நாமே

பூமிதனில் எம்குலத்தைக் காத்தருளும் காளி 

புண்ணியமே பத்திரகாளி பொன்னடியே சரணே!


கண்ணீரைத் துடைக்கின்ற தாயுமான ஈஸ்வரியே 

கவலைகள் போக்கிடும் காரணியே தாயே

விண்ணேறும் சோதியாய் வீற்றிருக்கும் காளி 

வினைகளை வேரறுக்கும் வீரமகள் நீயே!


உன்னையன்றி வேரொருவர் தஞ்சமிலை அம்மா 

உலகாளும் நாயகியே உத்தமியே காளி

எந்நாளும் உன்பாதம் ஏத்திடவே நல்வரம் எமக்களித்து 

வாழவைப்பாய் பத்திரகாளி தாயே!


கற்பூர ஒளியினிலே உன்னழகைக் காண கசிந்துருகி நிற்குதம்மா பக்தர்நெஞ்ச மெல்லாம்

பொற்பாதம் தஞ்சம்என்று வீழ்ந்திட்ட மாந்தர்க்கு 

புகலிடமாய் நின்றருளும் பொன்னிறத்தாய் போற்றி!


கிரான்குளப் பதியினிலே கீர்த்தியுடன் வாழும் 

கிருபாகரி பத்திரகாளி கண்பாராய் நீயே

தராதலத்தில் எம்குரலைக் கேட்டிடுவாய் அம்மா 

தவித்திடாமல் எமைக் காக்கும் தாயும்நீ தானே!


மங்களத்தின் நாயகியே மாசற்ற சோதியே மகாசக்தி பத்திரகாளி மாதாவே போற்றி

துங்கமுறும் உன்பாதத் தாமரையை நம்பி துதிபாடி நின்றோர்க்குத் துணையாவாய் நீயே!


திருவிளக்கு ஏற்றியுன்றன் நாமமதைச் சொல்ல 

தீராத துன்பமெல்லாம் தூசியாகுமம்மா

உருவத்தில் காளியாய் உள்ளத்தில் தாயாய் 

உயிர்காக்கும் பத்திரகாளி உன்னடியே சரணே!


ஆடிமுத்து மாரியென மாரியினைத் தந்து அவனியைக் காக்கின்ற அங்காள ஈஸ்வரியே

நாடிவந்தோம் உன்பாதம் நல்வாழ்வு தந்து நலமோடு வாழவைப்பாய் பத்திரகாளி தாயே!


சூலப்படை ஏந்திநிற்கும் சுந்தரியே காளி சூழ்ச்சிகளை முறியடிக்கும் தூயவளே தாயே

காலமெல்லாம் எம்துணையாய் கூடவே நின்று காப்பாய்நீ பத்திரகாளி கனிவோடு எம்மை!


மடையெடுக்கும் நல்நாளில் மங்கலங்கள் சூழ 

மாவிளக்கு ஏந்திநின்றோம் மாதாஉன் முன்னே

கொடுந்துயரம் வாராமல் எமைக் காத்து கொற்றவளாய் நின்றருள்வாய் பத்திரகாளி தாயே!


தீக்குழியில் பாய்ந்துனைத் தேடிவரும் பக்தர்க்கு 

தீக்குளிரும் பூவாக மாற்றிடுவாய் அம்மா

பூக்குழியாள் என்றே புவனமெல்லாம் போற்ற புண்ணியமே பத்திரகாளி பொன்னடியே சரணே!


சங்கரியே சாம்பவியே சர்வமங்கலாவே சங்கடங்கள் தீர்த்தருளும் சாந்தமகா காளி

அங்கயற்கண் தேவியவள் ஆத்தங்கரை வாழும் அம்மையே பத்திரகாளி பாதமே சரணே!


கிரான்குளத்து எல்லையிலே காவலாய் நின்றே தீயவற்றை அண்டாமல் செய்திடுவாய் அம்மா

வரமளிக்கும் நாயகியே வாலைபத் ரகாளி வாழையடி வாழையாய் வாழவைப்பாய் எம்மை!


நெஞ்சமதில் உன்னையன்றி வேறொன்றும் இல்லை 

நித்தமுமே உன்பாதம் போற்றிடுவோம் அம்மா

தஞ்சமென்று வந்தாரைத் தள்ளிடாத காளி தாயேபத் ரகாளி திக்கனைத்தும் காப்பாய்!


ஆடிமாதத் திருச்சடங்கு ஆனந்தமாய் முடிய 

அடியார்கள் கூடிநின்று போற்றுகின்றோம் அம்மா

நாடிவந்த நல்லவர்க்கு நல்வாழ்வு தந்து 

நலமோடு வாழவைப்பாய் பத்திரகாளி தாயே!


மங்களமாய் இப்பனுவல் பாடிநின்ற மாந்தர்க்கு 

மங்காத பேரருளைத் தந்திடுவாய் அம்மா

சங்கரனின் பாதியவள் சாந்தமகா காளி சர்வகாலமும் எம்மைக் காத்தருள்வாய் நீயே!

​அம்மன் அருளால் அனைவரும் வாழ்க! வளம் பெறுக!

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

கிரான்குளம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் தீமிதிப்பு – ஆன்மீக மகிமை