அம்மா எனும் ஆழமான வரிகளுக்குள்


 அம்மா எனும் ஆழமான வரிகளுக்குள்

###############################


அம்மா எனும் ஆழமான வரிகளுக்குள் ஆயிரம் பாசைகள் புகுந்து 

அத்தனையும் அழகாய் செய்து 

அதன் வழியில் நம் வாழ்வை 

அழகு படுத்திக் கொண்டிருக்கின்ற 

அன்பு பாசம் நிறைந்த ஒரு 

பரிசளிப்புத்தான் எங்கள் அம்மா


காலையில் எழுவாள் கடமைகள் முடிப்பாள்

உரிய வேளைக்கு உணவது கொடுக்க 

அடுப்படியிலவள் நெருப்போடு போராடி

புள்ளாங்குழலால் புகாரிபாடி 

புகையின் நடனமும் பழக்கம் அவளுக்குள்


நின்றபாடில்லை கண்ட இடத்தில் கழட்டி எறிந்த கந்தைகளெல்லாம் கசக்கிப்போட்டு கனதிகள் செய்வாள்

புதியதாய் மின்னும் புத்தாடையாய்

பிள்ளைகள் அணிய கண்கொளாக் காட்சியாய் மகிழ்ந்து களிப்பாள்


விளக்குமாறின் விட்டத்தடியெல்லாம்

அம்மா கையின் பக்குவம் பேசி

வீட்டு முற்றத்தின் விடுகதையாகி 

அவள் அளித்திட்ட பச்சயங்கள் யாவும்

ஒருநிலை கொண்டு உச்சியே வளர்ந்து

இருக்கின்ற பலாமர நிழலில் பாயில்லாமலே படுத்திடத் தூண்டும்


பிள்ளையின் சாகசம் பிறறவர் கூற 

பித்து பிடித்த மகிழ்ச்சி அவளுக்குள் 

யாரிடம் சொல்வதோ யாரிடம் கேட்பதோ என்று தன்னை அறியாத 

தரமிகுந்த மகிழ்ச்சி அவளுக்குள்ளும் 


கண்ணாகி நின்றெமை கருத்தாகக் காத்த தெய்வமாகிய காலமெல்லாம் நம் எண்ணமாய் வசிப்பவள் 

தாய்யெனும் தெய்வம் தரணியில் வந்ததோர் தலைமுகத்தாரகம் 

அவள் நீண்டதோர் காவியம் 

பெரும் கடலதன் ஓவியம் 


40 கடந்தாலும் இன்றும் தன் பிள்ளையை

பிள்ளையாய் பார்க்கும் மனதுக்குள் 

எத்தனை எத்தனை எண்ணங்கள் 

பிள்ளைகள் நன்முறையாய் வாழவேண்டும்

பேரன் பேர்த்திகள் படிப்பில் உயரவேண்டும் 

எந்த நோய்நொடியும்  வந்திடாத வசந்தகாலம் கொடு சாமி

என்கின்ற வேண்டுதல் தான்

அந்த ஜீவனுக்குள்


தாயவளுக்கு நிகராக யாருமில்லை அவளுடைய நெஞ்சிலே கோபமில்லை 

கூட இருக்கையில் பஞ்சமில்லை 

அவளது சொல்லுக்கு மிச்சமில்லை விகடம் செய்வதில் சக்தியில்லை 

அச்சம் என்பது தெரியவில்லை 

அவளது குரலில் ஏற்றமில்லை 

நேர் நின்று கதைத்துப் பார்த்ததில்லை 

அவளே இருக்கையில் வேறு இல்லை அற்புதம் என்பது வார்த்தையாகி அறனெனும் தோழியாய் எம்மோடு எம்மையே நடத்துவாள் 


பிள்ளைகள் ஆசைக்கு பிடிப்பில்லாததால் பிரிக்கப்படுகிறாள் 

நொந்த மனதாய் மேலும் மேலும் நொறுக்கப்பட்டு நோகடிக்கப்படுகிறாள் 

விந்தைகள் ஆயிரம் 

செய்தும் பலன் இல்லை விடுவிக்கப்படுகிறாள் 

மந்தமான புத்தி மாந்தர் மனம் புகுந்து மறுகணமே முதியோர் இல்லத்தில் முடக்கப்படுகிறாள்


அம்மாவை வணங்குவோம் 

அன்பினால் உயர்த்துவோம் 

நம் செயல் கண்டுமே 

நாளெல்லாம் மகிழட்டும்


அம்மாவே உலகின் முழுமை

அம்மாவே உலகின் வாழ்வு

அம்மாவே உலகின் வழி

அம்மாவே உலகின் செல்வம்

அம்மாவே உலகின் உறவு

அம்மாவே வாழ்வின் மகிழ்வு


அன்னையை வணங்குவோம்

அகிலத்தை உயர்த்துவோம்


__________________________

கவிஞர் ரவிகிருஷ்ணா 

மட்/கிரான்குளம்

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

கிரான்குளம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் தீமிதிப்பு – ஆன்மீக மகிமை