வெற்றுக் காகிதம்
வெற்றுக் காகிதம்
###############
தன்னை அறிமுகப்படுத்திக்
கொள்கிறது
ஒரு வெற்று காகிதம்
அது சரித்திரத்தில்
இடம் பிடிக்கப் போகின்றதா
இல்லையா
என்பது கையாள்வோரில் தான்
தங்கி இருக்கிறது
சட்டசபையும் செல்லலாம்
சனாதிபதி செயலகமும்
போகலாம்
இருப்பினும் அது
வெற்றுக் காகிதம் தான்
இப்போதைக்கு
பேனை
பதிக்கின்ற தடங்கள்
அது செல்லும் இடத்தினை
தீர்மானித்து விடுகின்றன
உலகம்
என்ற இயற்கைக்குள்
உய்ந்து கிடக்கிறது அறிவு
மனிதப் பிரளயங்கள்
மாறி மாறி
எதனையும் பேசலாம்
ஆனாலொரு
வெற்றுக் காகிதம்
நிரப்பப்படும் போது தான்
உறுதி பெறுகிறது
இந்த வெற்றுக் காகிதம்
எங்கள் மண்ணுக்கு
எங்கள் மக்களுக்கு
எங்கள் சந்ததிக்கு
எங்கள் வாழ்வினுக்கு
எங்கள் கல்விக்கு
என்றுதான்
விடிவு தர போகின்றதோ
அப்போதுதான்
அதன் மகிமை
எல்லோருக்கும் புரியும்
__________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா
Comments
Post a Comment