காலம்.....
காலம்.....
+++++++++++
கொஞ்ச நேரம் நானும் அங்க
நின்று பார்க்கிறேன்
கொளுத்திவிட்ட நெருப்பு மெல்ல
எரிய நோக்குதே
தண்ணி கிண்ணி தேடி நானும் கவர்ந்திழுக்கிறேன்
கை கொடுத்து வேலை செய்ய நாதியில்லையே
பட்டப் பகல் நேரம் என்று
பயந்திருப்பரோ
மிச்ச நேரம் வந்து நின்று
மிடுகெடுப்பரோ
சாதியில்லை சந்தமில்லை
ஒன்று மட்டுமே
சரவெடியாய் தூக்கி என்னை
வீசிப் விட்டதே
முத்துமணி ரத்தினங்கள் முளைத்திருப்பினும்
முழுமனதாய் சேவை செய்ய எவரிருப்பரோ
கந்தையானும் கசக்கிக் கட்ட நேரம் வேண்டுமே
கவலை யாவுகம் விட்டடெறிய
காலம் வேண்டுமே
சொந்த மண்ணில் வாழ்ந்து
நாங்கள் சோபையாகிறோம்
சோக கீதம் ஒன்று போதும்
சோர்ந்து போகிறோம்
இந்த நிலை வந்து விட்டால்
வீழுமெண்ணமோ
வினைகள் செய்ய ஒன்றுகூடி
கைகள் கூப்புவோம்
________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா

Comments
Post a Comment