நாளை
நாளை
######
நேற்று இன்று நாளையென்று
நேரமதும் கடப்பு வைத்து
நித்த நித்தம் ஊற வைத்த
நினைவுகளும் கடக்க விட்டு
அந்தி சந்தி பொந்து எலாம்
அலையவிட்டுக் காத்திருந்து
சொந்தப் புத்தி விட்டறிந்து
சோகக்கதைத் தட்டறிந்து
வெந்து நொந்து வேகமாகி
வேலை வட்டி பார்த்திருந்து
வந்து தந்து வரவு கண்டு
வார நாட்கள் கூடிருந்து
மெத்த மொத்தம் பார்க்கவில்லை மேனியெல்லாம் வியர்க்கவில்லை
ஆச்சி போச்சி கதைகளெல்லாம்
அந்த நேரம் பார்த்திருந்து
இஞ்சி கொஞ்சி இரக்கமாகி
இணையில்லாத துவக்கமாகி வஞ்சகப்பேய் வரவு கண்டு
வருடமுற்றும் கோவை கண்டு
பித்தும் புத்தும் வைத்தெழுந்து
பிதற்றலுறும் வார்த்தைகொண்டு சஞ்சலங்கள் விட்டெறிந்து
சர மழைகள் பொழிந்திடுமே
_________
கவிஞர்
ரவிகிருஷ்ணா
மட்/கிரான்குளம்
Comments
Post a Comment