கிரான்குளம் விநாயகர்க்கு (பாடல் 9)

 கிரான்குளம் விநாயகர்க்கு (பாடல் 9)

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 

கணங்களுக்கு அதிபதி ஆன எங்கள் கணபதி

கரிமுக நாயகனாம் காக்கும் எங்கள் ஜெயபதி

குலபதியாகி வந்தான் குளத்தூரன் குருபதி

குருநாதனாகி வந்தான் எங்கள் தமிழ் உருப்படி 

கிரான்குளத்தூர் பதியமர்ந்த கணபதியை பாருங்கள் 

காக்கும் தெய்வமான எங்கள் குருதியை போற்றுங்கள் - 2 

கிரான்குளம் பதியமர்ந்து அருள்கொடுக்கும் குகநிதி

கிருபையாவும் தந்து அருளும்

குவலயத்தோர் பெரும்பதி

குன்று தோறும் குடியமர்ந்த குமரன் வேலன் சகநிதி

ஈசனுமையின் பாலகனாய் இணைந்திருந்தான் பெருநிதி 

கிரான்குளத்தூர் பதியமர்ந்த கணபதியை பாருங்கள் 

காக்கும் தெய்வமான எங்கள் குருதியை போற்றுங்கள் - 2 

அப்பனிவன் பிள்ளையென்ற பெயரெடுத்த உருப்படி

ஆசை கொண்டு கூடுகிறோம்

அவன்பதியாம் சந்நதி

இலக்கிய நாயகனாம் இணையிலாத தம்பதி

ஈடிணை இலாதவனாம் எம்மைக் காக்கும் குணபதி 

கிரான்குளத்தூர் பதியமர்ந்த கணபதியை பாருங்கள் 

காக்கும் தெய்வமான எங்கள் குருதியை போற்றுங்கள் - 2 

சங்கடங்கள் தீர்த்து வைப்பான் அங்குசபதி கணபதி

சாகசங்கள் செய்து வைப்பான் எங்கள் சார்பில்லாத ஜெயபதி

குங்குமத்தின் நாயகனாம் குவலயத்தோர் 

வெகுமதி

கூடி நாங்கள் கூப்பிடுவோம் குறைவில்லாத குணபதி 

கிரான்குளத்தூர் பதியமர்ந்த கணபதியை பாருங்கள் 

காக்கும் தெய்வமான எங்கள் குருதியை போற்றுங்கள் - 2

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 

கவிஞர்

ரவிகிருஷ்ணா

(திரு.கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்)

கிரான்குளம் - 07

மட்டக்களப்பு

இலங்கை

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை