கிரான்குளம் விநாயகர்க்கு பாடல் - 5
கிரான்குளம் விநாயகர்க்கு பாடல் - 5
##############################
கணபதி கணபதி கணபதி என்று
காரியம் தொடங்குங்கள்
கற்பகநாதன் அருளது வேண்டி
கைகளைக் கூப்புங்கள்
ஆனைமுகனே கணபதியே....,....
அருள் தருவாயே ஜெயபதியே....... ஆற்றங்கரையினில் உறைபவனே....... ஆராத்தியுமக்கே குருபதியே.....
கிரான்குளப் பதியினில் அமர்ந்தே தினமும் அருள் மழை பொழிகின்றான் நம்பி வருவோர்க்கு நடன நாயகன் நல்லருள் தருகின்றான்
அவன் அருளாலே பாடுகிறோம் என்றும் எங்கள் வினைகளை போக்குகிறோம்
அவன் அருளாலே பாடுகிறோம் என்றும் எங்கள் வினைகளை போக்குகிறோம்
ஆனைமுகனே கணபதியே....,....
அருள் தருவாயே ஜெயபதியே....... ஆற்றங்கரையினில் உறைபவனே....... ஆராத்தியுமக்கே குருபதியே.....
கணபதி கணபதி கணபதி என்று
காரியம் தொடங்குங்கள்
கற்பகநாதன் அருளது வேண்டி
கைகளை கூப்புங்கள்
திருச்சியினுச்சியில் கோயில் கொண்டவன் அருள் தரும் நாயகனாம் ஈழத் திருமணி நாட்டின் இதய கோயிலில் அமர்ந்தவன் ஐங்கரனாம்
கூடியே நாங்கள் கூப்பிடுகிறோம் தினம் மனக்குறை எல்லாம் போக்குகிறோம்
கூடியே நாங்கள் கூப்பிடுகிறோம் தினம் மனக்குறை எல்லாம் போக்குகிறோம்
ஆனைமுகனே கணபதியே....,....
அருள் தருவாயே ஜெயபதியே....... ஆற்றங்கரையினில் உறைபவனே....... ஆராத்தியுமக்கே குருபதியே.....
கணபதி கணபதி கணபதி என்று
காரியம் தொடங்குங்கள்
கற்பகநாதன் அருளது வேண்டி
கைகளை கூப்புங்கள்
ஆவணி மாதம் வளர்பிறை நாளில் உதித்தவன் எங்கள் கணபதியாம் அகத்தில் நிறைந்தே அருள்மழை பொழியும் அன்பு நிறைந்தவனாம் ஒருமனதாக வேண்டுகிறோம் நாம் ஒவ்வொரு பொழுதும் துதித்திடுவோம்
ஒருமனதாக வேண்டுகிறோம் நாம் ஒவ்வொரு பொழுதும் துதித்திடுவோம்
களணிகள் சூழ்ந்திட கருத்தாய் அமர்ந்தவன் கலைகள் நிறைந்த நம் கணபதியாம்
இந்து சமுத்திரம் சுனையதாய் கொண்டவன இலக்கிய நாயகன் கணபதியாம்
இருகரம் கூப்பியே பாடுகிறோம் அவன் கருணை மழையதை போற்றுகிறோம்
இருகரம் கூப்பியே பாடுகிறோம் அவன் கருணை மழையதை போற்றுகிறோம்
ஆனைமுகனே கணபதியே....,....
அருள் தருவாயே ஜெயபதியே....... ஆற்றங்கரையினில் உறைபவனே....... ஆராத்தியுமக்கே குருபதியே.....
கணபதி கணபதி கணபதி என்று
காரியம் தொடங்குங்கள்
கற்பகநாதன் அருளது வேண்டி
கைகளை கூப்புங்கள்
____________
கவிஞர்
ரவிகிருஷ்ணா
மட்/கிரான்குளம்
Comments
Post a Comment