வறிது

 வறிது

====== 


பேனாக்கள் பிரசவிக்க

வார்த்தைகள் வறிதாகி

காகிதங்களைத் தேடி

அலைகிறது கடைசிவரை 


காகித வறிதில்

காட்சியும் கானமுமாய்

வார்த்தைகள் வெளிக்கிளப்பும்

ஓலமிட்ட ஒலியதனில்

கப்பம் கட்டும் வீரனாகி

காலமெல்லாம் குரல்கொடுக்கும் 


மூக்கின் மேல் வரிகொடுத்து

முறுக்குறும் மீசை முடி

சவரக் கத்தியதன் 

பிடியதற்கு வறிதுமாகி

அழகான முகமதுவோ

அலங்கோலக் கோணமாகி

அல்லல் மிகவும்பட்டு

அடிக்கடி முகமும் பார்க்கும்

கண்ணாடியும் உடைப்பெடுக்கும்

_________

கவிஞர்

ரவிகிருஷ்ணா

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

கிரான்குளம் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் சாதனையாளர் விழா 2025