சங்கமருவிய காலம்

 சங்கமருவிய காலம்


சுருக்க குறிப்புக்கள்


3 – 6 ம் நூற்றாண்டுவரையான காலப்பகுதி, அறநூற்காலம்

» சங்கங்கள் அருகிப்போனதால் இதனை சங்கமருவிய காலம் என்கின்றனர்

» அரசன் தனித்து ஆட்சி செய்யாமல் பலரது உதவியை பெற வேண்டியவனாக காணப்பட்டான்


பண்பாட்டு நிலை


ஆரியர் வருகையால் மக்களின் பண்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. வர்ண குலதர்மம் தோற்றம் பெற்றது

 மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு ஏற்படல், சமத்துவம் இல்லாது போனது.


சமய நிலை


அறநூற்காலமாக காணப்படல்

கடவுள் வழிபாட்டு முறை காணப்படல்

அந்தனர் வருகையால் புதிய கடவுள்கள் அறிமுகமாகினர் - இந்திரன், வருணன், அக்கினி, ஐயனார், சுப்பிரமணியர்

 சமண முனிவர்களும் பௌத்த சன்னியாசியும் தமது கொள்கைகளை பரப்பினர்

பள்ளிகளும் விகாரைகளும் போதனை இடங்களாக மாறின

கி.பி 470ல் வட்சரநந்தி எனும் முனிவர் திராவிட சங்கத்தை உருவாக்கி பௌத்த பிரசங்கங்களை மேற்கொண்டார்

களப்பிரரின் ஆட்சியை தொடர்ந்து மக்களிடையே சமயப்பகை ஏற்பட்டது.


சங்கமருவிய காலத்தில் அதிக அறநூல் தோன்ற காரணம் யாது?


சங்ககால மக்களிடையே காணப்பட்ட அதீத இன்பநுகர்ச்சி, போர் விரக்தி

சமண, பொளத்த மதங்களின் கொள்கைகளை மக்களிடையே பரவச் செய்தமை

வட இந்திய செல்வாக்கு நிறுவனங்களின் வளர்ச்சியில் தாக்கம் செலுத்தியமை

அரசு, சமூகம், வணிகம் போன்ற கட்டமைப்புக்கள் தோற்றம் பெற்றமையால் அவற்றை ஒழுங்குப்படுத்தவும் கட்டுபடுத்தவும் நெறிமுறைகள் தேவைப்பட்டது

அன்னியர் ஆட்சியில் ஏற்பட்ட சமூக சீர் கேடுகளில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டெடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டமை

சங்ககால பிறபகுதியில் ஏற்பட்ட போர், அனர்த்தங்களும் மக்கள் வாழ்க்கையில் விரக்தியை ஏற்படுத்தியது

சமண, பௌத்த மதங்களின் செல்வாக்கு அதிகரித்தமையால் தமது மதத்தை பாதுகாக்கும் வகையில் கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை.


சங்கமருவிய காலம் ஒரு அறநெறிக்காலமா?


• சமண பௌத்தம் வருகையால் அறக்கருத்துக்கள் அதிகம் பரவின

• இக்கால பாடு பொருளாக அறம் காணப்பட்டது

• சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காவியம் அறம் உரைத்தன

• சமண பௌத்த மதத்திற்கு எதிராக கண்டனம் தெரிவிக்கும் வகையில் அறக்கருத்துக்கள் வெளியிடப்படல்

•உலகியல் வாழ்க்கையில் வெறுப்படைந்த மக்களை தேற்ற அறக்கருத்து தேவைபட்டது எனவே அதிக அறக்கருத்து தோற்றம் பெற்றது.


சங்கமருவிய கால இலக்கிய பண்புகள்


1. கலப்பிரர் ஆட்சி

2. அறக்கருத்துக்கள் போற்றப்பட்டது

3. வெண்பா யாப்பு கையாளப்பட்டது

4. தொடர்நிலை செய்யுள்கள் காணப்பட்டமை

5. பக்தியின் தோற்றுவாயாக அமைதல்

6. காவியங்கள் தோற்றம் பெற்றமை

7. உரைநடை வளர்ச்சி ஆரம்பமானது

8. இலக்கணமும் நாடக அமைப்பும் காணப்பட்டது

9. அகத்திணை புறத்திணை மரபு காணப்படல்

10. எத்தகைய வரையரையும் இல்லை

11. பதிக அமைப்பு, அந்தாதி வடிவம் தோற்றம்


சங்ககாலத்திற்கும் சங்கமருவிய காலத்திற்கும் உள்ள ஒற்றுமைகள்


அறத்தை கொடுத்து உதவியது : யாதூம் ஊரே யாவரும் கேளீர்

எல்லோரும் எமது உறவினர்

நன்மையும் தீமையும் நாமே உருவாக்கிக் கொளவது

அவர் அவர் செய்த நன்மை தீமைக்கு ஏற்ப வாழ்க்கை

சங்கமருவிய காலத்தில் - நாலடியார், பழமொழி 400, திருக்குறள்

புறத்தை கொடுத்து உதவியது – களவழிநாற்பது (சோழ செங்க நானுக்கும், சேரமான் கடைக்கால்

திரும்பொறைக்கும் இடையே நடந்த போர் பற்றி குறிப்பிடுகின்றது.

அணிபயன்பாடு

திணையைக் கொடுத்துதவியது – திணைமொழி 50, 150 ஐந்திணை  50, 70

செய்யுள் முறையை கொடுத்து உதவியது

பாக்களை கொடுத்துதவியது –

அகவல், வஞ்சி, கலிப்பா சிலப்பதிகாரத்தில் பயன்படுத்தப்பட்டமை

கழிப்பா திருவிரட்டைமணிமாலை பாட காரணமாய் அமைந்தது

கார 40,களவளி 40, ஐந்திணை 50- வெண்பா யாப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது

நாடகப்பாங்கை கொடுத்துதவியது – தலைவன் தலைவி, தோழி கூற்று சிலப்பதிகாரத்தில் கண்ணகிக்கும் கோவலனுக்குமிடையே நடந்த உரையாடல் “என் கணவன் கள்வனா”?

ஆற்றுபடுத்தல் இலக்கிய முறையை கொடுத்தது

பதிக வடிவத்தை கொடுத்துதவியது – ஐங்குருநூறு தொண்டிப்பதியில் உள்ள 10 செய்யுள், பதிற்றுப்பத்து நான்காம் பகுதியில் உள்ள 10 பாட்டு அந்தாதி வடிவ தோற்றத்திற்கு காரணம்.


சங்ககாலத்திற்கும் சங்கமருவிய காலத்திற்கும் உள்ள வேற்றுமைகள்


» சங்ககாலத்தில் அகம், புறம், ஆற்றுபடுத்தல் என்பன பாடுபொருளாக அமைய சங்க மருவிய காலத்தில் அறமே பிரதான பாடு பொருளாக அமைந்தது

» சங்க மருவிய காலம் சமயம் சார் விடயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது

» சங்ககாலத்தில் தனித்துவமான தமிழ் முறையிலான வாழ்க்கை முறை சித்தரிக்கப்பட்டது சங்கமருவிய காலத்தில் வட இந்திய செல்வாக்கிற்கு உட்பட்டது.

» சமன பொளத்த செய்திகள் பரவலாயின.

» சங்ககாலத்தில் தனி நிலை செய்யுள்களே அதிகமாக தோற்றம் பெற்றது. சங்கமருவிய காலத்தில் தொடர்நிலை செய்யுள்கள் தோற்றம் பெறல் - திருக்குறள்

» தனிப்பாடல்கள், ஆற்றுபடை இலக்கியங்களாக சங்ககாலத்தில் இருக்க, அந்தாதி, இரட்டைமணிமாலை, காவியம் என பல இலக்கிய வடிவங்கள் மாற்றம் கண்டது

» தனி தமிழ் நடை காணப்பட்டது. சங்க மருவிய காலத்தில் வடமொழியும் தமிழ் மெழியும் கலந்த மனிபிரவாழ நடை அறிமுகம்.

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை