சோழர் காலம்

 சோழர் காலம்


சுருக்க குறிப்புக்கள்


கி.பி 9 – 14 நூற்றாண்டுவரையானக் காலப்பகுதி

400 ஆண்டுகால ஆட்சி

இலக்கிய வரலாற்றில் ஒரு பொற்காலம், காவியக்காலம்


1.

சோழர்கால இலக்கியங்கள்


சோழர்கால இலக்கிய வகை

1. காப்பியத்துறை

2. சிற்றிலக்கியத்துறை

3. சித்தாந்ததுறை

4. இலக்கணநூல்

5. ஊரைநடை

6. தொகுப்பு முயற்சிகள்

7. நிகண்டு நூல்கள்


காப்பியத்துறை – மாபெரும் காப்பியம், பெருங்காப்பியம், சிறுங்காப்பியம்

மாபெரும் காப்பியம்         பெரும் காப்பியம             சிறு காப்பியம்

1. கம்பராமாயணம்           1. வளையாபதி            1. உதயகுமார காவியம்

2. பெரியபுராணம்             2. குண்டலகேசி            2. நாககுமார காவியம்

3. கந்தபுராணம்                 3. சீவக சிந்தாமணி     3. யசோதர காவியம்

                                                                                                              4. சூளாமணி

                                                                              5. நீலகேசி

சிற்றிலக்கியத்துறை 


1. கலிங்கத்துப்பரணி

2. மூவருலா

3. தக்கையாக்கபரணி

4. நளவெண்பா

5. நரிவிருத்தம்

6. கொன்றை வேந்தன்

7. ஆத்திச்சூடி

8. மூதுரை

9. குலோத்துங்க சோழன்; பிள்ளைத்தமிழ்

10. திருதொண்டர் திருவந்தாதி

11. சரஸ்வதி அந்தாதி

12. சடகோப அந்தாதி


சித்தாந்ததுறை நூல்கள்


1. திருவுந்தியார்

2. திருகளிற்றுப்படியார்

3. சிவஞானபோதம்

4. சிவஞான சித்தியார்

5. இருபா இருபஃது

6. ஊண்மைவிளக்கம்

7. சிவப்பிரகாசம்

8. கொடிக்கவி

9. நெஞ்சுவிடுதூது

10. திருவருட்பயன்

11. வினாவெண்பா

12. போற்றிப்பற்றொடை

13. ஊண்மைநெறிவிளக்கம்

14. சங்கற்பநிராகரணம்


இலக்கணத்துறை


1. யாப்பருங்கல காரிகை

2. யாப்பருங்கல விருத்தி

3. வீரசோழியம்

4. நன்னூல்

5. நேமிநாதம்

6. நம்பியகப்பொருள்

7. துண்டியழங்காரம்

8. வச்சாநந்திமாலை


உரை நடை


1. வீரசோழிய உரை

2. யாப்பருங்கல உரை

3. திருக்குறள்

4. தொல்காப்பியம் - எழுத்து

5. தொல்காப்கியம் - சொல்

6. தொல்காப்பியம் - பொருள் 

7. திருக்கோவையார்

8. குநற்தொகை

தொகுப்பு முயற்சிகள்

1. தேவார திருமுறைகள்

2. 4000 திவ்ய பிரபந்தம்

3. பெரியபுராணம 


நிகண்டு நூல்கள்

1. திவாகரம் நிகண்டு

2. பிங்கல நிகண்டு

3. சூடாமணி நிகண்டு

4. ஊரிச்சொல் நிகண்டு

5. கயாதார நிகண்டு

6. அகராதி நிகண்டு

7. ஆசிரியர் நிகண்டு


2.

சோழர்கால இலக்கியப் பண்புகள்


1. உலகியலையும் இறையியலையும் போற்றுதல் - கம்பராமாயணம், நளவெண்பா

2. தத்துவம் தோற்றம் - திருவருட்பயன், மெய்கண்டசாஸ்த்திரங்கள் 14

3. பக்தி நெறி தொடர்ந்தமை -  கந்தபுராணம், பெரியபுராணம்

4. இறையடியாரை சிறப்பித்தல் - பெரியபுராணம், திருதொண்டர்தொகை, கம்பராமாயனம்

5. பொதுமக்களை சிறப்பித்தல் - ஏர் 70, ஈட்டி 70

6. அணிபயன்பாடு – கம்பராமாயணம், நளவெண்பா

7. இலக்கணநூல்கள் - நன்னூல், வீரசோழியம், நேமிநாதம்

8. நூல்களுக்கு உரை எழுதப்பட்டது - வீரசோழியம், யாப்பருங்கல, திருக்குறள்

9. காவியங்கள் தோற்றம்

10. பாவினப் பயன்பாடு – கம்பராமாயணம் விருத்தப்பா

11. சிற்றிலக்கியம் தோற்றம் - கலிங்கத்துபரணி, அம்பிகாவதி கோவை, குலோதுங்க பிள்ளைதமழ், 

   திருவந்தாதி

12. நாட்டார் பாடல் தன்மை – கம்பராமாயணம் தசரதன் புலம்பல், கோசலை தாலாட்டு

13. வடமொழிக் கலப்பு – ராமாயணம் வடமொழி மொழிபெயர்ப்பு

14. அகப்புற பயன்பாடு -  நம்பியகப்பொருள், கம்பராமாயணம்


3.

சோழர்கால காவியங்களில் பல்லவர் கால பக்தி இலக்கியத்தின் செல்வாக்கு


பல்லவர் கால பக்தியே காவியங்கள் தோன்ற காரணம் - கம்பன் ராமன் மீது கொணட்ட பக்தியால் கம்பராமாயணம் உருவாகியது. அதே போல் பெரியபுராணம், கந்த புராணத்திற்கும் பக்த்pயே காரணம்

பல்லவர் கால பக்தி இலக்கியங்களில் உள்ள புராண இதிகாச கருக்களே சோழர் கால இலக்கியங்களின் கருக்கலாக மாரியது. சம்மந்தரது பாடலில் ராவணன் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்தியை பாட பயன்படுத்திய விருத்தப்பா சோழர்காலத்தில் காவியம் படைக்க பயன்படுத்தப்பட்டது.

பல்லவர்கால பதி அமைப்பு சோழர் கால காவியத்தில் பின்பற்றப்பட்டது

சோழர்கால இலக்கிய வளர்ச்சிக்கு இக்கால சூழல் எத்தகைய தாக்கத்தை செலுத்தியது?

 ஆரசன் வழிமை படைத்தவனாக காணப்பட்டமை

 பொருளாதார ஸ்த்தீர தன்மை

 அமைதி நிலவியமை

 எல்லா சமயமும் ஆதரிக்கப்பட்டமை

 வடமொழியை சிறப்பித்தமை

 வள்ளல்களும், மக்களும், மன்னனும் புலவர்களை ஆதரித்தமை

அதிக காவியங்கள் தோன்ற ஏதுவாய் அமைந்த காரணிகள் யாவை

 அரசியல் ஸ்த்திர தன்மை

 அமைதியான சமூக சூழ்நிலை

 வடமொழி ஈடுபாடு

 சமயங்களுக்கு இடையிலான நல்லினக்கம்

 அரசர்கள் புகழ்விரும்பிகளாக இருந்தமை

 பெரும் புலவர்கள் வாழ்ந்தமை

 புலவர்கள் ஆதரிக்கப்பட்டமை

 மக்களுக்கிருந்த நுண்கலை மீதான ஈடுபாடு


4.

சோழர் காலம் ஒரு பொற்காலம் என்பதற்காண காரணங்கள்


அரசியல், சமூக, பொருளாதார நிலைமைகளில் மேம்பாடு அடைந்து காணப்பட்டமை

தமிழ் பேரரசு நிறுவப்பட்டமை, தமிழகம் சிறப்படைந்தமை

உள்நாட்டு குழப்பங்களோ, சமய உட்பூசல்களோ இல்லாமல் இருந்தமை

 பல்வேறுபட்ட இலக்கிய வடிவங்கள் தோற்றம் பெற்றமை

இலக்கியங்களுக்கான வரையறை கூறும் இலக்கண நூல்கள் தோற்றம் பெற்றமை

பழைய இலக்கியங்கள் தேடி தொகுக்கப்பட்டமை

 நூல்களுக்கு உரைகள் எழுதப்பட்டது

முன்னைய கால இலக்கியங்களின் தொடர்ச்சியாக மட்டுமன்றி வளர்ச்சியாகவும், நிறைவாகவும் இக்காலம் காணப்பட்டமை. இலக்கிய முயற்சிகள் மட்டும் இன்றி ஏனைய நுண்கலைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஏனைய காலங்களோடு ஒப்பிடும் போது பல்வேறு வழிகளில் சிறப்பானதொரு காலமாக இது காணப்படுதல்.

பல்லவர் காலத்திற்கும் சோழர் காலத்திற்கும் உள்ள ஒற்றுமைகள்

பல்லவர் கால இலக்கியங்களின் தொடர்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் இலக்கியங்கள் தோற்றம் பெற்றமை

பல்லவர் கால பாடு பொருளான பக்தி சோழர்காலத்தில் பெருவழக்காயிற்று – பெரியபுராணம்

இறையடியார்களை பாடும் தன்மை இங்கும் காணப்பட்டது. பெரியபுராணம், திருதொண்டர் தொகை

பல்லவர் கால கருக்கள் காவியங்கள் படைக்க காரணமாயிற்று கோசலை தாலட்டு, தசரதன் புலம்பல் முதலியன கம்பராமாயண தோற்றத்திற்கு உதவின

பெரியாழ்வார் கண்ணனை குழந்தையாக வைத்து பாடிய பாடல்கள் சோழர் காலத்தில் பிள்ளைத்தமிழ் வடிவ இலக்கியம் தோன்ற காரணமாயிற்று

சம்மந்தரின் “சிறையாரு மாடக்கிளியே இங்கே வா..” எனற பாடலானது சோழர் காலத்தில் தூது இலக்கியம் தோற்றம் பெற காரணமாயிற்று – நெஞ்சுவிடு தூது

சங்கயாப்பு முதலிய இலக்கண நூல்கள் யாப்பருங்கல காரிகை, யாப்பெருங்கல விருத்தி என்பன தோற்றம்பெற காரணமாயிற்று.

பல்லவர்கால இலக்கியங்கள் இங்கு தொகுக்கப்பட்டது – 12 திருமுறை, 4000 திவ்ய பிரந்தம்.

சோழர் கால காவிய மரபு பிற்கால  இலக்கிய வளர்ச்சிக்கு எவ்வாறு உதவியது

• விருத்தப்பா பிற்காலத்தில் பயன்படத்தப்படல்

• வடமொழி கதைகள், வடநூற் கருத்துக்கள் தொடர்ந்தும் இலக்கிய்ஙகளில் பின்பற்றப்பட்டமை – வியாச பாரதத்தை தழுவி   ,வில்லிபுத்துர் ஆழ்வாரின் பாரதம்

•கம்பராமாயணம், சீவக சிந்தாமணி போனறன நைடதம், வில்லிபுத்தூரரின் பாரதம் என்பன தோற்றம்

•திருதொண்டர் புராணம், பெரியபுராணம் என்பன திருவிளையாடல் புராணம், காசிகாண்டம், கூர்மபுராணம், சேதுபுராணம், திருப்பரங்கிரபுராணம் தோன்ற காரணமாயிற்று

•சோழர் கால காவிய மரபில் காணப்பட்ட விசித்திரமான வர்ணனை, அணியலங்காரம் இலக்கியங்களில் இடம்பெறல் 

  காளமேகபுலவர், இரட்டையர், சிவபிரகாசசுவாமிகள் நூல்கள்

•சமய சார்பான இலக்கியங்கள் பிற்காலத்தில் தோன்ற சோழர்கால காவிய மரபு காரணமாய் அமைந்தது. – தேம்பாவனி, ரட்சணிய யாத்திரிகம்


5.

சோழர் கால காவியத்திற்கும் சங்க மருவிய கால காவியத்திற்கும் இடையிலான வேறுபாடு யாது


 பாட்டுடைத் தலைவன்


சங்கமருவிய கால காப்பியங்கள் தலைவிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது - சிலப்பதிகாரம், மணிமேகலை


சோழர் கால காப்பியங்கள் தன்னிகரில்லா தலைவனை அடிப்படையாகக் கொண்டது - ராமாயணம்


நாட்டுப்பின்னணி

சங்கமருவியகாலம் தமிழ்நாட்டை பின்னணியாகக் கொண்டது - சிலப்பதிகாரம், மணிமேகலை

சோழர்காலம் - வடநாட்டு பின்னணியைக் கொண்டது

 

பாவினம்

சங்கமருவிய கால காவியங்கள் அகவற்பாவால் பாடப்பட்டது

சோழர்கால காவியம் விருத்தப்பாவால் பாடப்பட்டது


இலக்கண மரபு

சங்கமருவியகால இலக்கியங்கள் தாம் விரும்பிய இடத்திலிருந்து தொடங்குகின்றது

சோழர்கால காவியங்கள் தண்டியழங்காரம் கூறும் மரபிற்கு ஏற்ப ஆரம்பிக்கப்படுகின்றது.


அமைப்பு முறை

சங்க மருவிய கால காவியத்தில் பாத்திரங்களின் அளவு, காவியத்தின் பரப்பு என்பன குருகியது

சோழர்கால காவியத்தில் அதிகமான பாத்திரங்களும் பரந்த எல்லையையும் கொண்டதாக இருத்தல்

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை