சுயநலம்

 சுயநலம்

####### 


வெளுப்புக்கு மட்டும்

வெள்ளையும் சால்வையும்

புன்முறுவல் பூத்தமுகம்

உள்ளுக்குள் என்னவோ

மறுபடியும் அப்படித்தான் 


தூசுபடியவிடா துடுக்குகளின்

கொண்டாட்டம்

உள்ளொன்று வைத்து

புறமொன்று பேச்சு 


சந்தர்ப்பம் வந்துவிட்டால்

அள்ளிக் கையும் பாராது 

அப்படியே அமுக்கம் 


வெண்ணிற ஆடை மூர்த்தி

வேறேதும் செய்யார்

கோழிகள் முட்டையிட

விலைக்குமவர் வாங்கி வைப்பார்கொக்கரிப்பை 


அப்படியே கிடக்கிறது

அட்ஷய பாத்திரம்

தூசு துடைத்தபடி

மீண்டும் பயணம்

மக்களின் வாழ்வோ

மறுபடியும் துயரம் 


_________

கவிஞர்

ரவிகிருஷ்ணா

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

கிரான்குளம் கல்வி அபிவிருத்தி சங்கத்தின் சாதனையாளர் விழா 2025