அமலனாதிபிரான்
தமிழ் அமலனாதிபிரான் உயர்தரம் 12, 13 தொகுப்பு திரு.கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் (ஆசிரியர்) BA, MA (TAMIL), PGDE (MERIED), MED, SLTS அமலனாதிபிரான் (திருப்பாணாழ்வார்) 1. திருப்பாணாழ்வார், திருவரங்கப் பெருமானின் அவயவங்கிளில் மனம் பறிகொடுத்த தன்மைக்கான எடுத்துக்காட்டுக்களைக் கூறுக? •திருவரங்கனின் திருப்பாதங்கள் - என் கண்களில் உள்ளன. •திருவரங்கனின் சிவந்த ஆடையில் - என் சிந்தனை மேவி நிற்கிறது. •திருவரங்கனின் திருவுந்தியில் - என் உள்ளத்தில் மேவிய உயிர் நிற்கிறது. •திருவரங்கனின் திருவயிறு – அடியேன் உள்ளத்தில் உலாவுகின்றது. •திருவரங்கனின் திருமார்பு – அடியேனை ஆட்கொண்டது. •திருவரங்கனின் திருக்கழுத்து – அடியேனை உய்யச் செய்தது. •திருவரங்கனின் பவளச் செவ்வாய் - என் சிந்தை கவர்ந்தது. •திருவரங்கனின் கண்கள் - என்னைப் பேதைமை செய்தன. •திருவரங்கனின் நீலமேனி – என் மனதை நிறைத்தது. 2.திருவரங்க (ஸ்ரீரங்க)ப் பெருமளைப் பற்றி திருப்பணாழ்வார் முன்வைக்கும் வருணனைகளைத் தருக? •அமலன், ஆதிபிரான், விமலன், விண்ணவர்கோன், வடவேங்கடவன், நிமலன், நின்மலன், நீதி வானவன்,...