அமலனாதிபிரான்

தமிழ்

அமலனாதிபிரான் 

உயர்தரம் 12, 13



தொகுப்பு
திரு.கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் (ஆசிரியர்)
BA, MA (TAMIL), PGDE (MERIED), MED, SLTS



அமலனாதிபிரான்  
(திருப்பாணாழ்வார்)

1. திருப்பாணாழ்வார், திருவரங்கப் பெருமானின் அவயவங்கிளில் மனம் பறிகொடுத்த தன்மைக்கான எடுத்துக்காட்டுக்களைக் கூறுக?

•திருவரங்கனின் திருப்பாதங்கள் - என் கண்களில் உள்ளன.
•திருவரங்கனின் சிவந்த ஆடையில் - என் சிந்தனை மேவி நிற்கிறது.
•திருவரங்கனின் திருவுந்தியில் - என் உள்ளத்தில் மேவிய உயிர் நிற்கிறது.
•திருவரங்கனின் திருவயிறு – அடியேன் உள்ளத்தில் உலாவுகின்றது.
•திருவரங்கனின் திருமார்பு – அடியேனை ஆட்கொண்டது.
•திருவரங்கனின் திருக்கழுத்து – அடியேனை உய்யச் செய்தது.
•திருவரங்கனின் பவளச் செவ்வாய் - என் சிந்தை கவர்ந்தது.
•திருவரங்கனின் கண்கள் - என்னைப் பேதைமை செய்தன.
•திருவரங்கனின் நீலமேனி – என் மனதை நிறைத்தது.

2.திருவரங்க (ஸ்ரீரங்க)ப் பெருமளைப் பற்றி திருப்பணாழ்வார் முன்வைக்கும் வருணனைகளைத் தருக?

•அமலன், ஆதிபிரான், விமலன், விண்ணவர்கோன், வடவேங்கடவன், நிமலன், நின்மலன், நீதி வானவன், திருவரங்கத்தம்மான், உவந்த உள்ளத்தன், துளபமாலை நிவந்த நீள் முடியன், வெங்கணைக் காகுத்தன், வானவர் சந்தி செய்ய நின்றவன், அரவினணையான், அந்தி போல் நிற்த ஆடையன், அயனைப் படைத்த உந்தியன், ஓத வண்ணன், துண்டப் பிறையான் துயர் தீர்த்தவன், மாநிலம் முற்றும் உண்ட கண்டன், சுரி சங்கினை ஏந்திய கையன், அக்கினி ஏந்தியவன், சக்கராயுதம் ஏந்தியவன், நீள்வரை மெய்யன், துளப விரையார் கமழ் நீள்முடியன், மாயன், ஐயன், அவுணன் உடல் தீண்டியவன், அமரர்க்கரிய ஆதிபிரான், பெரிய கண்களுடையவன், ஆலிலை மேல் பாலகன், ஞாலம் ஏழும் உண்டவன், மணிமாலையும் முத்துமாலையும் தவழ்கின்றவன், கொண்டல் வண்ணன், வெண்ணெய் உண்ட வாயன், கோவலன், அண்டர்கோன், என் உள்ளங் கவர்ந்தவன், என்னைத் தன் வரமாக்கியவன், என்னுட் புகுந்தவன், என் பழவினைப் பற்றறுத்தவன்.

3.திருவரங்கம் பற்றி திருப்பணாழ்வார் முன்வைக்கும் வருணனைகளைத் தருக?

•நீள்மதிலரங்கம், கடியார் பொழிலரங்கம், மதுரமா வண்டுபாட மயிலாடுமரங்கம், வண்டுவாழ் பொழில் சூழரங்கம், அணியரங்கம்,

4.திருவேங்கடம் பற்றி திருப்பணாழ்வார் முன்வைக்கும் வருணனைகளைத் தருக?

•விரையார் பொழில் வேங்கடம்
•மந்தி பாய் வட வேங்கடம்

5.இலங்கை பற்றி திருப்பணாழ்வார் முன்வைக்கும் வருணனைகளைத் தருக?

•சதுர மாமதில் சூழ் இலங்கை

6.அமலனாதிபிரான்' பதிகத்தில் வந்துள்ள இதிகாசபுராணக் கதைகள் எவை?

•இராவணன் வதம் - இராம அவதாரம்
•இரணியன் வதம் - நரசிம்ம அவதாரம்
•சிவன் துயர் தீர்த்தமை – புராணக் கதை
•மூவுலகை ஈரடியால் அளந்தமை – வாமன அவதாரம்
•திருவுந்தியில் இருந்து பிரமனைப் படைத்தமை – புராணக் கதை
•ஆலிலை மேல் பாலகனாய்த் தோன்றியமை – கிருஷ்ண அவதாரம்
•வெண்ணெய் திருடி உண்டமை - கிருஷ்ண அவதாரம்
•உலகமுண்டமை - கிருஷ்ண அவதாரம்

7.திருவரங்கப் பெருமானின் அவயங்களில் ஈடுபடடுருகிய திருப்பாணாழ்வார் பாடிய பதிகத்தில் தன்னை இறைவன் ஆட்கொண்டமை பற்றி கூறியவற்றைத் தருக?

•அடியார்க்கென்னை ஆட்படுத்தியவன்
•பாரமாய பழவினைப் பற்றறுத்துத் ன் வாரமாக்கி வைத்தவன்
•என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றோன்றினைக் காணவே'
•திருவரங்கன் அவயங்கள் ஒவ்வொன்றும் என் உ;ளத்தில் நீங்காமல் நிறைந்துள்ளது,

8.அரங்கநாதனின் தோற்றப் பொலிவு எவ்வாறு கூறப்பட்டுள்ளது?

அரங்கநாதனின் தோற்றப் பொலிவினை, திருப்பாணாழ்வார் பாதாதி கேசமாக வர்ணித்துப் பாடி உள்ளார்.
•தாமரை மலர் போன்ற திருவடிகள்
•அரையும் அதன் மீதணிந்துள்ள சிவந்த ஆடையும்
•அந்தி வண்ண ஆடையும் அதன்மேல் எழில் உந்தியும்
•கடலலையின் வண்ணம் கொண்ட மேனியில் விளங்கித் தோன்றும் உதரபந்தனம்
•அழகிய ஆரமணிந்த திருமார்பு
•உலகம் ஏழையும் விழுங்கிய கண்டம்
•சிவந்த வாய்
•செவ்வரி ஓடிய பெரிய கண்கள்
•நீல மேனி
•வெண் வெண்ணெய் உண்ட வாய்

9.பெருமாள் பெருமைகள் எவ்வாறு கூறப்பட்டுள்ளது?

•மலங்களால் பீடிக்கப்படாதவன்
•விண்ணவர் தலைவன்
•மூவடியால் உலகளந்து, மாபலியை அடக்கியவன்
•பிரமனைப் படைத்தவன்
•பிறவிப் பிணிக்குக் காரணமான வினைகளை அறுத்தவன்
•இராவணனின் பத்துத் தலைகளும்; சிதறடித்தவன்
•இரணியனை வதம் செய்தவன்
•துண்டவெண் பிறையான் துயர் தீர்த்தவன

10.தலச் சிறப்பு எவ்வாறு கூறப்பட்டுள்ளது?

•நறுமணம்மிக்க மலர்ச் சோலைகள் நிறைந்த திருவேங்கட மலை
•குரங்குகள் தாவி விளையாடி மகிழும் வளமிக்க திருவேங்கட மலை
•நீண்ட மதில்களைக் கொண்ட திருவரங்கம்
•வண்டு பாட, மயிலாடும் திருவரங்கம்
•வண்டுகள் வாழும் சோலைகள் நிறைந்த திருவரங்கம்
•அழகுமிக்க திருவரங்கம்

11.பெருமாள்மீது திருப்பாணாழ்வார் கொண்ட பக்தி எவ்வாறு கூறப்பட்டுள்ளது?

•அரங்கனைத் தரிசிக்க வேண்டும் என்ற நெடுநாள் ஏக்கம் திடீரென்று நிறைவேறியமையால் அடைந்த பரவசம்.
•அவனுடைய திருமேனியினின்றும் கண்களை எடுக்க முடியாது நிற்றல்.
•அரங்கனின் பாதம் முதல் கேசம் வரை, ஒவ்வொன்றாகக் கண் அனுபவித்து
உயிரும் உள்ளமும் ஒன்றிய பரவச நிலை.
•அவனது பெருமைகளையும் திருமேனி அழகையும் கண்டு உள்ளம் நிறைதல்.
'ஐயோ நிறை கொண்டது என் நெஞ்சினை......'
•திருமேனி அழகில் ஈடுபட்ட கண்ணால் வேறொன்றைக் காணவிரும்பாமை.
'என்னமுதினைக் கண்ட கண்கள்......'
•பரவசத்தால் அறிவழிந்த நிலைமை.
உ-ம் : 'பெரியவாய் கண்கள் எனைப் பேதைமை.......

12.இடம் பெற்றுள்ள அணிகள்

•உவமை 
கமல பாதம் (1)
அந்தி போல் நிறத்தாடை (3)
ஓதவண்ணன் (4)
நீள் வரை போல் மெய்யனார் (7)
கொண்டல் வண்ணன் (10)

குறிப்பு – பாடல் உதாரணங்களை பொருத்தமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை