Posts

Showing posts from October, 2025
 ஔவை விழா பாடல்  ################# ஔவை விழா ஔவை விழா  ஔவை விழாதமிழ் அன்னைவிழா மீன் பாடும் தேனகத்தில் மீளுகின்ற வாசகத்தில் கதிரவனே இயற்றுகிறான்  கானமது இசைத்தபடி தென்றலதன் வாசகத்தில்  தேடுகின்ற தாயகத்தில்  வேல்முருகன் சகோதரர்கள்   வழங்குகிறார் அனுசரணை வழங்குகிறார் அனுசரணை ஔவை விழா ஔவை விழா .... தமிழ் மணக்கும் சாயலிலே  தரமுயர்ந்த பாடலிலே  கலைபலவும் காணுகிறார்  தேனகத்தின் வாசலிலே பூத்திருக்கும் மலர்களவை புதுமணமாய் வீசி வர வில்லிசைத்த பாடலதும் வெற்றி மாலை சூடி வரும் வெற்றி மாலை சூடி வரும் ஔவை விழா ஔவை விழா .... பட்டிமன்ற பேரவையின்  ஔவை விழா அவையுமல்லோ கூடி நின்று கை கொடுப்பார்  குவயங்கள் தான் மறப்பார்  நெஞ்சினிலே நினைவிருக்க  நேசம் கொண்ட மலருக்க  ஔவை விழா மலச்சியிலே ஆனந்த களிப்பு வரும் ஆனந்த களிப்பு வரும் ஔவை விழா ஔவை விழா .... ___________________________ கவிஞர் ரவிகிருஷ்ணா

பாரதியும் நானும்

 பாரதியும் நானும் ############## புயல் காற்றாய் பாய்ந்த குரல் பாரதியின் வியந்த குரல் அந்தத் தாளத்தில் துள்ளிக் குதித்து மெல்ல நடக்க நானும் சிறிது எத்தனங்களோடு தத்தி தத்தி பயணிக்கிறேன் "அச்சமில்லை அச்சமில்லை" என அறம் புகட்டிய வீரமிகு தமிழ்க்கவிஞர் அச்சத்தின் சுவர்களை இடித்தெறிந்தார்  அகாலத்தின் பிடியதை தூரப் போட்டு காலத்தின் கதவு நோக்கி பயணமாகிய புதுமைக் கவிஞன் இறுக்கிக் கட்டிய சுதந்திரச் சங்கிலியை சொற்கணை கொண்டு சிதறடித்து வாழ்வில் புதுமை தந்த  சொற்போர் கவிஞர்  சிறைப்பட்ட உள்ளங்களை விடுவிக்க எத்தனிக்கும் மனங்கள் அரிது அரிது இந்த மானிடர் உலகினிலே தேசம் ஒன்றாகி மொழியும் ஒன்றாகி  மக்களும் ஒன்றாகி அவர்தம் குரல் மின்னலாய் முழங்க நானும் என் சிறு குரலில் அந்த ஒலியைத் தேடுகிறேன்  பயணத்துக்காக "புதுமைப் பாடல்கள்" கொண்டு புதிய உலகம் படைக்க விரும்பி  பயணம் கொண்டான் பாவியல் கவிஞன் நானோ புதிய சிந்தனையில் சிறு விதைகளுடன் பயணமாகிறேன் நல்ல விதைகள் விதைப்பதற்காக __________________________ கவிஞர் ரவிகிருஷ்ணா

வாசிப்புக்கு சவாலாகும் தொலைபேசி

 வாசிப்புக்கு சவாலாகும் தொலைபேசி ############################### இன்றைய நவீன உலகில், தொலைபேசி மனித வாழ்வின் அன்றாடத் துணையாகிப் போயுள்ளது. தொடர்பாடல், தகவல் பரிமாற்றம், பொழுதுபோக்கு, வணிகம் என அனைத்தையும் ஒரு விரல் தொட்டிலேயே நமக்கு கிடைக்கச் செய்கிறது. ஆனால், இந்த வசதியுடன் சில மறைமுக சவால்களும் வந்து சேருகின்றன. குறிப்பாக வாசிப்புப் பழக்கத்திற்கு தொலைபேசி ஒரு பெரும் தடையாக மாறி வருகிறது. முன்பு, மக்கள் பொழுதைக் கழிப்பதற்கு நூல்கள், பத்திரிகைகள், இதழ்கள் போன்றவற்றை வாசிப்பது வழக்கம். அந்த வாசிப்பு பழக்கம் அறிவை வளர்க்கும் விதமாகவும், சிந்தனையை ஆழப்படுத்தும் விதமாகவும் இருந்தது. ஆனால் இப்போது, அந்த நேரத்தை பெரும்பாலும் தொலைபேசி திரையில் சமூக வலைத்தளங்கள், வீடியோக்கள், குறும்படங்கள் போன்றவற்றில் செலவழிக்கின்றனர். இதனால் ஆழமான வாசிப்பிற்கான ஆர்வம் குறைந்து வருகிறது. தொலைபேசியின் மிகப்பெரிய கவர்ச்சி "உடனடி திருப்தி" ஆகும். ஒரு பொத்தானைத் தொட்டால் நொடிகளில் தகவலும் பொழுதுபோக்கும் கிடைக்கிறது. இதன் காரணமாக, நீண்ட நேரம் எடுத்துக் கொண்டு ஒரு நூலை வாசித்து ரசிப்பது கடினமாகிறது. மனித ...