பாரதியும் நானும்
பாரதியும் நானும்
##############
புயல் காற்றாய் பாய்ந்த குரல்
பாரதியின் வியந்த குரல்
அந்தத் தாளத்தில் துள்ளிக் குதித்து
மெல்ல நடக்க நானும் சிறிது எத்தனங்களோடு தத்தி தத்தி பயணிக்கிறேன்
"அச்சமில்லை அச்சமில்லை" என
அறம் புகட்டிய வீரமிகு தமிழ்க்கவிஞர்
அச்சத்தின் சுவர்களை இடித்தெறிந்தார்
அகாலத்தின் பிடியதை தூரப் போட்டு
காலத்தின் கதவு நோக்கி பயணமாகிய புதுமைக் கவிஞன்
இறுக்கிக் கட்டிய சுதந்திரச் சங்கிலியை
சொற்கணை கொண்டு சிதறடித்து
வாழ்வில் புதுமை தந்த
சொற்போர் கவிஞர்
சிறைப்பட்ட உள்ளங்களை விடுவிக்க
எத்தனிக்கும் மனங்கள் அரிது அரிது இந்த மானிடர் உலகினிலே
தேசம் ஒன்றாகி
மொழியும் ஒன்றாகி
மக்களும் ஒன்றாகி
அவர்தம் குரல் மின்னலாய் முழங்க
நானும் என் சிறு குரலில்
அந்த ஒலியைத் தேடுகிறேன்
பயணத்துக்காக
"புதுமைப் பாடல்கள்" கொண்டு
புதிய உலகம் படைக்க விரும்பி
பயணம் கொண்டான் பாவியல் கவிஞன்
நானோ புதிய சிந்தனையில்
சிறு விதைகளுடன் பயணமாகிறேன் நல்ல விதைகள் விதைப்பதற்காக
__________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா
Comments
Post a Comment