கிரான்குளம் எனும் பெயர்
கிரான்குளம் எனும் பெயர் ======================== கிரான்குளம் என்ற பெயர் கிழக்கிலே உதித்த பெயர் மீன்பாடும் தேனகத்தின் மடியனைய வந்த பெயர் குளத்தோரப் புற்களிலே குவலயமாய் நின்ற பெயர் முன்னோரின் மூதுரையாய் முடியாக வென்ற பெயர் மட்டு நகர் பதியிருந்து பதினேழு மயில் தொலைவாய் மண்முனைப் பற்றுதன்னில் தெற்கினிலே எல்லையுறு கிராமமாகி நின்ற பெயர் நான்கு கிராம அலுவலர் பால் மக்களவர் நிறைந்திருந்து மகிழ்வு காணும் மலர்ச்சிப் பெயர் கடல் நீரின் கலப்பினிலே மீனவர்கள் கலந்திருந்து இரவு பகல் ஒருமனதாய் ஓயாத அலைகளிடம் ஒருகதையாய் சொன்ன பெயர் நன்நீரின் நயம் படைப்பில் நட்பினால் நாளிகை பால் விராலோடு விண்மீனும் கதை பேசி விழிக்கும் பெயர் இயற்கையன்னை அரவணைப்பில் விவசாயமது தழைத்தோங்கி வெள்ளரியின் விசேடமதை உலகறிய செய்தபெயர் நெசவோடு பிரம்பு பனையோலையென கைத்தோழில்கள் பற்பலவும் கலந்திருந்திருக்கும் கனவுப்பெயர் விவேகானந்த பூங்காவது வியப்புடனே அழகு செய்து சஞ்சீவினி வைத்தியசாலை நிதம் இதயமாற்று சிகிச்சைகாணும் பெரிய கட்டு பெயரதுவும் பெருமிதமாம் இதனணைப்பில் தர்மபுரம்...