Posts

கிரான்குளம் எனும் பெயர்

Image
  கிரான்குளம் எனும் பெயர்  ======================== கிரான்குளம் என்ற பெயர்  கிழக்கிலே உதித்த பெயர்  மீன்பாடும் தேனகத்தின்  மடியனைய வந்த பெயர்  குளத்தோரப் புற்களிலே  குவலயமாய் நின்ற பெயர்  முன்னோரின் மூதுரையாய்  முடியாக வென்ற பெயர்  மட்டு நகர் பதியிருந்து பதினேழு மயில் தொலைவாய் மண்முனைப் பற்றுதன்னில் தெற்கினிலே எல்லையுறு கிராமமாகி நின்ற பெயர் நான்கு கிராம அலுவலர் பால் மக்களவர் நிறைந்திருந்து மகிழ்வு காணும் மலர்ச்சிப் பெயர் கடல் நீரின் கலப்பினிலே மீனவர்கள் கலந்திருந்து இரவு பகல்  ஒருமனதாய் ஓயாத அலைகளிடம் ஒருகதையாய் சொன்ன பெயர் நன்நீரின் நயம் படைப்பில் நட்பினால் நாளிகை பால் விராலோடு விண்மீனும் கதை பேசி விழிக்கும் பெயர் இயற்கையன்னை அரவணைப்பில் விவசாயமது தழைத்தோங்கி வெள்ளரியின் விசேடமதை உலகறிய செய்தபெயர் நெசவோடு பிரம்பு பனையோலையென கைத்தோழில்கள் பற்பலவும் கலந்திருந்திருக்கும் கனவுப்பெயர் விவேகானந்த பூங்காவது வியப்புடனே அழகு செய்து சஞ்சீவினி வைத்தியசாலை நிதம் இதயமாற்று சிகிச்சைகாணும் பெரிய கட்டு பெயரதுவும் பெருமிதமாம் இதனணைப்பில் தர்மபுரம்...

நம் இளைய தலைமுறை

Image
  நம் இளைய தலைமுறை #################### இன்றைய இளைய தலைமுறை என்பது எதிர்கால சமூகத்தின் முதன்மை தூண்கள். அறிவியல், தொழில்நுட்பம், கல்வி போன்ற பல துறைகளில் புதிய முன்னேற்றங்களை உருவாக்குவதில் அவர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களின் சிந்தனை முறைகள் விரிவானவை, தொழில்நுட்ப அறிவு அதிகம், உலகைப் புரிந்துகொள்ளும் திறன் உயர்ந்தது என்பன இவர்களின் பலமாகும். இன்றைய இளைஞர்கள் இணையம் மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாக உலகத்தை கைக்குள் வைத்துள்ளனர். எந்தத் தகவலையும் சில விநாடிகளில் அறிந்து கொள்ளும் திறன் பெற்றுள்ளனர். இதனால் அவர்களின் அறிவு விரிவடைந்தாலும், அதே நேரத்தில் கவன சிதறல், நேர மேலாண்மை குறைவு போன்ற சவால்களும் உருவாகின்றன. மேலும், தொழில் வாய்ப்புகள் பல துறைகளில் இருந்தாலும், போட்டி மிகுந்ததால் மன அழுத்தம், எதிர்காலம் குறித்த பதட்டம் போன்ற உணர்வுகளும் இளைஞர்களை பாதிக்கின்றன. இன்றைய தலைமுறையின் முக்கிய அம்சம் சமூக பிரச்சினைகளில் விழிப்புணர்வுடன் செயல்படுவதாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பாலின சமத்துவம், மனித உரிமைகள் போன்ற விஷயங்களில் அவர்கள் வெளிப்படையாக கருத்துக்களை தெரிவித்து மாற...

தரம் 10 நீதிப் பாடல்

Image
  அடுத்த பதிவில் நாவலர் எழுந்தார் வினா விடை பதிவிடப்படும்

காலம்.....

Image
 காலம்..... +++++++++++ கொஞ்ச நேரம் நானும் அங்க  நின்று பார்க்கிறேன்  கொளுத்திவிட்ட நெருப்பு மெல்ல  எரிய நோக்குதே  தண்ணி கிண்ணி தேடி நானும் கவர்ந்திழுக்கிறேன் கை கொடுத்து வேலை செய்ய நாதியில்லையே பட்டப் பகல் நேரம் என்று  பயந்திருப்பரோ மிச்ச நேரம் வந்து நின்று  மிடுகெடுப்பரோ சாதியில்லை சந்தமில்லை  ஒன்று மட்டுமே சரவெடியாய் தூக்கி என்னை  வீசிப் விட்டதே முத்துமணி ரத்தினங்கள் முளைத்திருப்பினும்  முழுமனதாய் சேவை செய்ய எவரிருப்பரோ கந்தையானும் கசக்கிக் கட்ட நேரம் வேண்டுமே  கவலை யாவுகம் விட்டடெறிய  காலம் வேண்டுமே  சொந்த மண்ணில் வாழ்ந்து  நாங்கள் சோபையாகிறோம் சோக கீதம் ஒன்று போதும்  சோர்ந்து போகிறோம் இந்த நிலை வந்து விட்டால்  வீழுமெண்ணமோ  வினைகள் செய்ய ஒன்றுகூடி  கைகள் கூப்புவோம் ________________________ கவிஞர் ரவிகிருஷ்ணா

சைவ சமையம் வினா விடை தொகுப்பு தரம் 4

Image
 சைவ சமயம் வினா விடை தொகுப்பு தரம் 4
Image
கவிஞர் ரவிகிருஷ்ணாவின் ஹைக்கூ கவிதைகள் 

வெற்றுக் காகிதம்

Image
 வெற்றுக் காகிதம் ############### தன்னை அறிமுகப்படுத்திக்  கொள்கிறது ஒரு வெற்று காகிதம்  அது சரித்திரத்தில்  இடம் பிடிக்கப் போகின்றதா  இல்லையா  என்பது கையாள்வோரில் தான்  தங்கி இருக்கிறது சட்டசபையும் செல்லலாம்  சனாதிபதி செயலகமும்  போகலாம் இருப்பினும் அது  வெற்றுக் காகிதம் தான்  இப்போதைக்கு பேனை  பதிக்கின்ற தடங்கள்  அது செல்லும் இடத்தினை தீர்மானித்து விடுகின்றன உலகம்  என்ற இயற்கைக்குள்  உய்ந்து கிடக்கிறது அறிவு மனிதப் பிரளயங்கள்  மாறி மாறி  எதனையும் பேசலாம் ஆனாலொரு  வெற்றுக் காகிதம்  நிரப்பப்படும் போது தான்  உறுதி பெறுகிறது இந்த வெற்றுக் காகிதம்  எங்கள் மண்ணுக்கு  எங்கள் மக்களுக்கு  எங்கள் சந்ததிக்கு  எங்கள் வாழ்வினுக்கு  எங்கள் கல்விக்கு  என்றுதான்  விடிவு தர போகின்றதோ  அப்போதுதான்  அதன் மகிமை  எல்லோருக்கும் புரியும் __________________________ கவிஞர் ரவிகிருஷ்ணா