கவிஞர் ரவிகிருஷ்ணாவின்

ஹைக்கூ கவிதைகள்
########################

நெற்றியில் வியர்வை
முத்து முத்தாய் இருக்கிறது
பற்களின் வரிசை
_____________________

நீரதன் ஓட்டம்
நீண்ட அரவமாய் தெரிகிறது
சுற்றிய கயிறு
_____________________

மீன்பிடித் துறையில்
கூடிய சனங்களின் கூட்டம்
சத்தியாக்கிரகம்
_____________________

பானையில் சோறு
சரியாக பதமாய் இருக்கிறது
விளைகின்ற நிலம்
_____________________

குருவியின் கூடு
தொங்கிய நிலையில் இருக்கிறது
மரத்தினில் வெளவால்
_____________________

நீண்ட பயணம்
என்றும் நிலையான துன்பம்
சந்தேகப் புத்தி
_____________________

பசும்பாலின் செழுமை
அழகிய குழந்தையில் தெரிகிறது
குறும்பதன் வண்ணம்
_____________________

பிள்ளைகள் இன்பம்
எப்போதும் பெற்றோரின் கனவு
நீடித்த வாழ்வு
_____________________

பத்தும் பறப்பது
பசி வந்தால் தெரியும்
ஏழைகள் வாழ்வு
_____________________

அந்நியர் ஆட்சி
என்றும் உணர்வதன் மிகுதி
தகாத தண்டனை
_____________________

மேற்பார்வை செய்தல்
சிலருக்கு வேண்டா வெறுப்பு
களப் பரிசோதனை
_____________________

சொல்வது இலகு
அவரே செய்வது கடினம்
களத்தில் வேலை
_____________________

பெறுபேறு மட்டும்
அரச பாடசாலை அடைவு
பலரது எண்ணம்
_____________________

பிள்ளையின் வாழ்வு
நினைக்கொணாத் துயரம்
ஒருவழிப் பாதை
_____________________

இயந்திரப் படகு
நீரில் கவிழ்ந்து கிடக்கிறது
இன்றைய போக்குவரத்து
_____________________

ஒன்றினில் வேட்கை
நிலையான வெற்றியின் சின்னம்
பயிற்சியும் முயற்சியும்
_____________________
கவிஞர்
ரவிகிருஷ்ணா
மட்/கிரான்குளம்
ஈழம்

Comments

Popular posts from this blog

பிள்ளைகளின் வளர்ச்சியில் மனவெழுச்சி விருத்தி

ஆரியச்சக்கரவர்த்திகளின் காலத்திற்கு முற்பட்ட காலம்

சிறுவர்களுக்கு தண்டனை வழங்குதல் பற்றிக் குறிப்பிட்டவர்களும் அவர்களின் கூற்றுக்கள் பற்றியதுமான ஒரு விளக்கவுரை