தோற்றாலும் விடமாட்டேன்
தோற்றாலும் விடமாட்டேன்
######################
வீழ்ந்தாலும் மீண்டும் எழடா
விரும்பியே சூரியனாய் வெழடா
நிழலாலும் பயம் இல்லை
நாளைய வெற்றிக்கு பயணம் செய்
வார்த்தைகள் உனைத் தாழ்த்தினாலும்
வலிமை உன் உள்ளத்தில்தான் பிறக்கும்
தடைகள் உனக்கு பாடமாகி
தாண்டி செல்வதுதான் சாதனை
தோல்வி ஒரு தருணம் மட்டும்
தொலைவே உனக்கு நிரந்தரம் கிடையாது.
வெற்றி உன்னைத் தேடிவரும்
விடாமுயற்சியிலே தான் நம்பிக்கை எழும்
உன் பயணம் முடிவற்றது
உன்னையும் தாண்டும் கனவுகள் நிறைந்தது
தோற்றாலும் விடமாட்டேன் என்று
இறுதிவரை நீயாகவே வாழ்வாய்
கவிஞர் ரவிகிருஷ்ணா
Comments
Post a Comment