மாணவருலகம் (பாடல்)
மாணவருலகம் (பாடல்)
👫👫👫👫👫👫👫👫👫👫
மாணவருலகம் என்ன அது
மல்லிகையாய் மணம் வீசிடுது
புன்னகையே புதிராகிடுது
புதியதோர் பொக்கிசம் தேடிடுது
தேடுது தேடுது தேடுது - மனம்
பாடுது பாடுது பாடுது
உச்சந் தலையினில் ஊறுது
உள்ளுக்குள்ளே கனவாகுது
வானம் தொடுகின்ற கனவு அது
வாழ்வில் நம்பிக்கைக் கதிர்களது
அறிவியல் பயணம் அவர்களது
அறவியல் பாடம் ஆகியது
தேடுது தேடுது தேடுது - மனம்............,.
பாடநூல் கையில் தவழ்கிறது
பாதையில் அவர்கள் உறுதியது
ஆசிரியர் வார்த்தை ஏணியது
அறிவெலாம் தினமும் தேடியது
தேடுது தேடுது தேடுது - மனம்............,.
முயற்சியை தினமும் தோழனென
மூச்சது கையதில் இலக்குமென
முடிந்தவை எல்லாம் கனவுமென
முகமது மகிழ்வே அவர்களது
தேடுது தேடுது தேடுது - மனம்............,.
__________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா
மட்/கிரான்குளம்
Comments
Post a Comment