நிழலின் வசத்தில்.......
நிழலின் வசத்தில்.......
====================
மரம் ஒன்று விருட்சமாகி வானளாவி உயர்ந்து நிற்க
வெயிலதன் கனத்தினுக்கே நல்ல நிழல் தந்துதவும்
நிழலின் மீது சித்திரங்கள் ஓவியமாய் தான் விரிய
பட்சிகளின் பரவசத்தில் பாடிநானும் கழிக்கும் எண்ணம்
கூட்டமாக குவிந்து நிற்கும் பசுக்களிடம் கேட்டுப் பார்க்க ஆசை கொஞ்சம் வந்தெனக்கு அள்ளி அள்ளி இறைக்கிறது
கனத்த வெயில் தன்னினுள்ளும் மெல்லிதான தென்றல் ஒன்று வானம்பாடி வருகையிலே பழுத்த இலை விழுகும் சத்தம் பண்ணிசையாய் விரிகிறது
வெயில் குழி தேகமதோ தண்மை நிழல் நாடி நிற்க
ஈட்டுக்குப் போட்டியதாய் பறவைகளின் பறப்பொலிகள்
கதை ஒன்று சொல்லி வந்து கவிதையாய் விரிகிறது
நெற்றியில் பொட்டு வைத்த வதனம் எல்லாம் வாடி நின்று
ஏதேதோ கதைகள் பேசி எத்தனிக்கும் வெயிலில் நீங்க
_________________________
கவிஞர் ரவிகிருஷ்ணா
மட்/கிரான்குளம்
Comments
Post a Comment