Posts

Showing posts from 2019

புத்தாண்டு

பு புத்தாண்டு மீண்டும் மீண்டும் நீ பிறந்து நித்திலம் பிரம்மிக்க மனிதரின்            ஆராவரிப்பு            வருடமொன்று போக வயசுமொன்று போகும் நேற்றுத்தான் பார்த்தாற்போல் தேதி ஒன்று மீண்டும் நாளை இருப்பினும் மனிதரினம் இன்னமும் சாடிக்குள் வழி தேடுகிறார் வருக! வருக! புதியதாய் புதுயுகம் படைக்க ரவிகிருஷ்ணா கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன் கிரான்குளம், மட்டக்களப்பு புத்தாண்டு

இலங்கையின் கல்விமுறையும் கோளமயமாக்கமும்

இலங்கையின் கல்வி முறையும் கோளமயமாக்கமும்   இலங்கையின் கல்விமுறையானது காலத்திற்குக் காலம் மாற்றங்களுக்கு உட்பட்டு வந்தாலும் காலத்தின் நகர்ச்சியில் உலகம் தழுவியதாக நிதர்சனப்படுவதை கட்டுப்படுத்த முடியாததக உள்ளது. உலக மயமாக்கல் விரிவுக்கு முற்பட்ட இலங்கையின் பாரம்பரியமான கல்வியில் நிலவுடமைப் பொருளாதாரப் பண்புகளும் காலணித்துவப் பண்புகளும் கலந்த செயல்வடிவத்தைக் கொண்டிருந்தது (ஜெயராசா, 2009). என்றும் கைத்தொழிற்சாலை மனிதரைப்பற்றி என்ன புலக்காட்சி கொள்ளுகின்றதோ அத்தகைய புலக்காட்சியை கல்வி நிறுவனங்களும் மேற்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன கல்வி நிலையங்கள் தொழிற்சாலைகள் என்ற அணுகு முறைக்குள் கொண்டுவரப்படுகின்றன (ஜெயராசா, 2009). என்றும் குறிப்பிட்டுள்ளமை கவனிக்கத் தக்கது.   சந்தைப் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் சிந்தனையாளர்கள் 'எதையும் சந்தைக்கு விடுங்கள்' (டுநயஎந வை வழ வாந அயசமநவ) என்ற ஒலிப்பை கல்வி, மருத்துவம் என்ற மானிட சேவைத் துறைகளிலும் தீவிரமாக வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். வறுமைக் கோட்டின்கீழ் வாழ்பவர்களின் வறுமைக்குரிய சுரண்டற் காரணிகள் மூடி மறைக்கும் அறிகைச் செயற்...

பாடு மீன்

சிறுவர் பாடல் பாடுமீன் பாடுமீனே பாடுமீனே எங்கே இருக்கிறாய் நீயும் எங்கே இருக்கிறாய் நீயும் பாடவழி கிடைத்த கதையை எனக்குச் செல்லித்தா நீயும் எனக்குச் செல்லித்தா பாடிப் பாடி பாடிப் பாடி பெயரெடுத்தாயோ – அதுவும் தேனிசையாய் வருவதற்கு வழியெடுத்தாயோ மீன்பாடும் தேன்நாடாய் மலரச் செய்தாயோ வையகமே போற்ற – நீயும் வழிசமைத்தாயோ நீயும் வழிசமைத்தாயோ ரவிகிருஷ்ணா (கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்) பிள்ளையார் கோயில் வீதி கிரான்குளம் - 07, மட்டக்களப்பு

பறக்கும் நாணேறிய அம்புகள்

Image
பறக்கும் நாணேறிய அம்புகள் அன்று காலை கதிரோன் தன் செவ்வொளியை செப்பனிட்டு பிரகாசிக்க ஆரம்பிக்க ஆறுமுகன் மெல்ல எழுந்து இறைவன் பொருட்டுச் சாத்துவதற்காக வண்டுகள் மொய்க்குமுன்னே பூக்களைக் கொய்ய ஆரம்பித்தான் அப்போது அவனது நெஞ்சத்தே பழைய நினைவுகள் மலர ஆரம்பித்தன. அவன் ஒரு கூலித் தொழிலாளி ஆயினும் ஒன்றிலும் சளைத்தவனல்ல (கட்டிடம் கட்டுதல், தச்சுத் தொழில், வேளான்மை வெட்டுதல், பயிர் செய்தல் எனச் சகலதும்) இத்தனைக்கும் அவன் தரம் ஐந்து வரையே கற்றவன் அவன் பெற்ற அனுபவங்களால் தமிழில் மாத்திரமல்ல ஆங்கிலத்திலும் எழுத வாசிக்க கற்றுக் கொண்டவன் சிங்களத்தை சிக்கெடுத்து வாசித்து சிதையாது எழுதும் வல்லமையும் கொண்டவன். தனது மனைவியிடமும் நான்கு பிள்ளைகள் மீதும் பாலும் தேனும் போல மிகுந்த அன்பு கொண்டவன் இலங்கை மண் சந்தித்த யுத்த அவலம் இவன் வாழ்விலும் ஊடுருவ மறுக்கவில்லை மட்டுமன்றி சமநிலை கொள்ளமுடியாத தோல்விகள் பல கண்டவன். ஒரு நாள் காலை வேலைக்குச் செல்லத் தயாராகும் போது துப்பாக்கி ரவைகள் பெரும் சத்தத்தோடு அணிவகுத்து தன் வீட்டிற்கு மேலே செல்ல  'என்னடி மாரி அது பெரும் சத்தமாக் கிடக்கு நீ இங்க நிக்கா...

பாடசாலைக் கலாசாரம்

பாடசாலைக் கலாசாரம் 1. பாடசாலைக் கலாசாரம் என்றால் என்ன? • பாடசாலை என்பது அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள் ஆகியோரை இணை;துச் செயற்படும் ஒரு நிறுவனமாகும். இன்நிலையில் அப்பாடசாலையில் பணியாற்றவோர் பயன்பெறுவோர் யாவரும் 'நாங்கள் இங்கே எவ்வாறு செயற்படுகின்றோம்', 'எங்களது செயற்பாடுகளை நாங்கள் எவ்வாறு வெற்றி கொள்கின்றோம்' என்பதை வெளிப்படுத்துவதாக அமைவதே பாடசாலைக் கலாசாரமாகும். • Tel Ford   (1996) என்பார் பாடசாலைக் கலாசாரத்தை பின்வருமாறு வரையறுக்கின்றார்.பாடசாலைக் கலாசாரம் என்பது 'நிலத்தின் அடியில் ஓடிக்கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத சிறு சிறு பிணைப்புக்களைக் கொண்ட நீரோட்டம் போன்றதாகும்.' இங்கே சிறு சிறு பிணைப்புக்கள் எனப்படுவது பாடசாலை ஆசிரியர்களிடையேயும் மாணவர்களிடையேயும் காணப்படும் சமவலுவுள்ள பரஸ்பர உணர்வுகளும் மாறுதல்களும் ஆகும். இவ்வரைவிலக்கணம் பாடசாலையின் ஆசிரியர்களினதும் மாணவர்களினதும் பற்றுதலை அடிப்படையாகக்கொண்ட பிணைப்புக்களே பாடசாலைக் கலாசாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான அடிப்படைக் என்பதை வலியுறுத்துவதாக உள்ளது. • பாடசாலைக் கலாசாரம...

அம்மா

அம்மா அம்மா எனும் அறிமுகத்தில்; என்தனக்கு உறவானாள் ஆருயிராய் என்னை அன்போடு அரவணைத்தாள் இன்னல் முடிக்க இரவு பகல் ஊனுறக்கம் விட்டிருந்தாள் ஈரேள் உலகு முதல் போற்றிடவே பெயரும் பெற்றாள் உன்னதமாய் உடனிருந்து ஊட்டி வளர்த்தெடுத்தாள் ஊரார் பேச்சை விட்டு என்பிள்ளை என்பிள்ளை என்றுரைத்தாள் எப்பொழுதும் எந்தன் முகவதனம் மகிழ்ந்துவர மலர்வு கண்டாள் ஏசிவிட்டாளென்றால் எனைநினைத்து புலம்பி அழுதிடுவாள் ஐம்புலமும் சீராய் விளங்கிவர சிற்றின்பப் பாட்டிசைப்பாள் ஒரு நாள் முடிவதில்லை தினம் தினம் தொடர்ந்திடுவாள் ஓசியிலே முத்தம் கேட்டு என்னை எப்போதும் அணைத்திடுவாள் ஒளடதம் தந்தே எனை அபிஷேகம் செய்து வைப்பாள் இஃது இப்பாரினிலே இணையுண்டோ என் அன்னைத்தமிழ் பெண்மணிக்கு வாழ்க! வாழ்க! அன்னையவள் வழிவழியாய் வரவேண்டும்  வசந்தமது அன்னையவள் வாழ்வினிலே ரவிகிருஷ்ணா (கிருஷ்ணபிள்ளை ரவீந்திரன்) பிள்ளையார் கோயில் வீதி கிரான்குளம் - 07, மட்டக்களப்பு இலங்கை

கிராமத்து வாசம்

Image
கிராமத்து வாசம் மக்கள் கூட்டம் தமக்குத் தேவையான பொருளையெலாம் அவசர அவசரமாக வாங்கிக்கொண்டு தத்தமது வீடுகட்கு செல்லும் வாகன இரைச்சல் காதுகளைத் துளைக்க எஸ்.எல்.ஏ.எஸ் ஒப்பிசரான சுதன் தனது மனைவிக்கும் இரண்டு பிள்ளைகட்கும் எவ்விடர்களும் வராமல் இருப்பதுடன் உலகமுய்யும் அனைத்து உயிர்களையும் காக்கவும் வேண்டி கடவுளை வணங்கி இராப்போசனம் முடித்து உறக்கத்திற்கு செல்ல ஆயத்தமானான் நகரம் என்ற பேரில் நரகமாக காட்சி தரும் அலங்கோல மேடை என எண்ணி கட்டிலில் புரண்டு புரண்டு படுத்தாலும் உறக்கமில்லை ஏசியின் காதுகளை முறுக்கியும் உறக்கமில்லை மின்விசிறி குறைவாக சுழல்கிறதோ என கையால் சுத்திவிட எத்தனிக்கும் மனம் இத்தனைக்கும் மத்தியில் தான் போறனை ஒன்றில் வேலை செய்யும் தொழிலாழி போல் இருப்பதாக எண்ணுகின்றான். உறக்கம் கலைக்கும் சூழலை எண்ணி வருந்தி தமது கிராமத்து வாசத்தை மீட்டலானான். ஆமாம் அது ஓரு செழிப்பான வனப்புமிக்க கிராமம் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனைப்பற்றில் அமைந்துள்ள கிரான்குளம்தான் அவனது ஊர். கிராமத்தின் மேற்கே மீன்பாடும் வாவியது வயல்களோடு வரிசைகட்டி நிழல் மரச் சோலைகளுடன் அழகு செய்ய கிழக்கிலே வங்கக் கடலா...